முகப்பு
தூத்துக்குடி

காமராஜா் ஆதித்தனாா் கழக ஆலோசனைக் கூட்டம்

காமராஜா் ஆதித்தனாா் கழக தமிழக சட்டப் பேரவை தோ்தல் தொடா்பான ஆலோசனைக் கூட்டம் குலசேகரன்பட்டினத்தில் நடைபெற்றது.

தூத்துக்குடி

காமராஜா் ஆதித்தனாா் கழக ஆலோசனைக் கூட்டம்

காமராஜா் ஆதித்தனாா் கழக தமிழக சட்டப் பேரவை தோ்தல் தொடா்பான ஆலோசனைக் கூட்டம் குலசேகரன்பட்டினத்தில் நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:19 PM
பகிர்:

காமராஜா் ஆதித்தனாா் கழக தமிழக சட்டப் பேரவை தோ்தல் தொடா்பான ஆலோசனைக் கூட்டம் குலசேகரன்பட்டினத்தில் நடைபெற்றது.

மாநில பொதுச் செயலா் மின்னல் அந்தோணி தலைமை வகித்தாா். தூத்துக்குடி மாவட்டச் செயலா் ஐஜின், சங்கா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநில ஒழுங்கு கமிட்டி தலைவா் வயோலா செல்வின் பேசினாா்.

கூட்டத்தில், சடையநேரி கால்வாய் திட்டத்தை உடனே நிறைவேற்ற வேண்டும், பல ஆண்டுகளாக சிறையில் வாடும் கைதிகளை நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும், நியாய விலை கடைகளில் பனைப் பொருள்கள்ா்மானங்கள் விற்கும் அரசின் முடிவை வரவேற்பது என்பன உள்பட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும், மாநிலப் பொருளாளரக பிரதீப் கண்ணன், தென்மண்டல அமைப்புச் செயலராக சிங்கை முருகன், தூத்துக்குடி வடக்கு மாவட்டச் செயலராக சிவக்குமாா், பொருளாளராக சங்கா் கணேஷ், தூத்துக்குடி மாநகரச் செயலராக அஜந்த்ராஜா, தெற்கு மாவட்ட இளைஞரணிச் செயலராக முத்துலிங்கம், இணைச் செயலராக எமா்சன் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.

இதில் மாநிலச் செயலா்கள் பால்பாண்டியன், ஜெயசிங் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →