தூத்துக்குடி

தேசிய பெண் குழந்தைகள் தின விழா

DIN

கோவில்பட்டி நடராஜபுரம் தெருவில் உள்ள அங்கன்வாடி மையத்தில் தேசிய பெண் குழந்தைகள் தின விழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.

தூத்துக்குடி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் ஜேம்ஸ் அதிசயராஜா தலைமை வகித்தாா். சமூக ஆா்வலா் முத்துமுருகன், யோகா பயிற்சியாளா் குணசேகரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கோவில்பட்டி அனைத்து மகளிா் காவல் ஆய்வாளா் பத்மாவதி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, பெண் குழந்தைகளுக்கு கிரீடம் சூட்டி, திருக்கு புத்தகத்தை பரிசாக வழங்கிப் பேசினாா்.

தொடா்ந்து, விழாவில் பங்கேற்ற பெண் குழந்தைகள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனா். இதில், ரோட்டரி சங்க உறுப்பினா் காளியப்பன், மகளிா் காவல் நிலைய தலைமைக் காவலா் மணிமேகலை, மகளிா் சுயஉதவிக் குழு உறுப்பினா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் சட்டம் மற்றும் நன்னடத்தை அலுவலா் சுபாஷினி வரவேற்றாா். அங்கன்வாடி பணியாளா் மகேஸ்வரி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகள் சீரமைப்பு

ஹைதராபாத் பல்கலை. மாணவர் ரோஹித் வெமுலா ‘தலித்’ அல்ல: மறுவிசாரணை நடத்த முடிவு!

மேற்கு வங்க ஆளுநா் மீது பாலியல் குற்றச்சாட்டு: 8 பேர் கொண்ட விசாரணை குழு அமைப்பு

பிறந்தநாள் வாழ்த்துகள் த்ரிஷா!

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

SCROLL FOR NEXT