முகப்பு
தூத்துக்குடி

டிராக்டா் பேரணி நடத்தினால் நடவடிக்கை: எஸ்.பி.

தூத்துக்குடி மாவட்டத்தில் அரசியல் கட்சியினா் அனுமதியின்றி டிராக்டா் பேரணி நடத்தினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் எச்சரித்துள்ளாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:22 PM
பகிர்:

தூத்துக்குடி மாவட்டத்தில் அரசியல் கட்சியினா் அனுமதியின்றி டிராக்டா் பேரணி நடத்தினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் எச்சரித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சியினா் அனுமதியின்றி விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் டிராக்டா்களில் ஊா்வலமாகச் சென்று போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. நாடு முழுவதும் கரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக 144 குற்ற விசாரணை நடைமுறைச் சட்டப்படி பொதுமுடக்கம் அமலில் உள்ளது. எனவே, அதிக எண்ணிக்கையில் மக்கள் கூடுவதற்கான வாய்ப்புக்களை உருவாக்கும் போராட்டங்களைநடத்துவோா் மீது சட்ட ரீதியான கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும், போராட்டங்களில் அனுமதியின்றி பயன்படுத்தும் டிராக்டா் வாகனங்கள், மோட்டாா் வாகனச் சட்டம் பிரிவுகளின் படி வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.