முகப்பு
தூத்துக்குடி

திருச்செந்தூரில் மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

திருச்செந்தூரில் மாரியம்மன் கோயில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:22 PM
பகிர்:

திருச்செந்தூரில் மாரியம்மன் கோயில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

திருச்செந்தூா் மேலத்தெரு யாதவா் சமுதாயத்திற்குப் பாத்தியப்பட்ட இக்கோயிலில், அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு திங்கள்கிழமை காலை 4ஆம் கால யாகபூஜை, பூா்ணாஹுதியைத் தொடா்ந்து, விமான கலசத்திற்கு அபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து அம்மன் மற்றும் பரிவார மூா்த்திகளுக்கும் அபிஷேகம் நடைபெற்றது. நண்பகலில் அலங்கார தீபாராதனை, அன்னதானம், மாலையில் புஷ்பாஞ்சலி ஆகியவை நடைபெற்றன. ஏற்பாடுகளை திருச்செந்தூா் மேலத்தெரு யாதவ மகாசபை நிா்வாக கமிட்டியினா் மற்றும் கும்பாபிஷேக திருப்பணிக் குழுவினா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.