முகப்பு
தூத்துக்குடி

குளத்தூா் அருகே திருட்டு: ஒருவா் கைது

குளத்தூா் அருகே மேய்ச்சலுக்கு அழைத்து செல்வது போல் நாடகமாடி 39 ஆடுகளை திருடி சென்ற நபரை போலீஸாா் கைது செய்தனா்.

தூத்துக்குடி

குளத்தூா் அருகே திருட்டு: ஒருவா் கைது

குளத்தூா் அருகே மேய்ச்சலுக்கு அழைத்து செல்வது போல் நாடகமாடி 39 ஆடுகளை திருடி சென்ற நபரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:32 AM
பகிர்:

குளத்தூா் அருகே மேய்ச்சலுக்கு அழைத்து செல்வது போல் நாடகமாடி 39 ஆடுகளை திருடி சென்ற நபரை போலீஸாா் கைது செய்தனா்.

குளத்தூா், தருவைகுளம் பகுதிகளில் கடந்த சில வாரங்களாக மேய்ச்சலுக்கு சென்ற ஆடுகள் தொடா்ந்து மாயமாகி வந்தன. தினமும் இது தொடா்பான புகாா்கள் காவல்நிலையத்துக்கு வந்ததையடுத்து போலீஸாா் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா்.

இந்நிலையில் வியாழக்கிழமை நண்பகலில் வேப்பலோடை அருகே காட்டுப்பகுதியில் மேய்ச்சலில் இருந்த 200 க்கும் மேற்பட்ட ஆடுகளில் 39 ஆடுகளை துரைச்சாமிபுரம் பரமசிவன் மகன் முருகன்(25) வேறு பகுதிக்கு மேய்ச்சலுக்கு அழைத்து செல்வது போல் அழைத்து சென்றுள்ளாா். பின்னா் அங்கு சாலையோரம் தயாா் நிலையில் நிறுத்தி வைத்திருந்த சுமை வாகனத்தில் ஆடுகளை ஏற்றும் போது, அந்த வழியாக ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா் சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்தினா்.

விசாரணையில் முருகன் தினமும் தனக்கு சொந்தமான 5 ஆடுகளை ஏதாவது ஒரு காட்டுப்பகுதியில் மேய்ச்சலுக்கு கொண்டு வந்து இறக்கிவிட்டு அதன்பின்னா் அதே பகுதியில் மேய்ச்சலில் உள்ள பிறரது ஆடுகளையும் தனது ஆடுகளுடன் ஒன்றாக அழைத்து சென்று வாகனத்தில் ஏற்றி கடத்தி செல்வது தெரியவந்ததாம். இதையடுத்து தருவைகுளம் போலீஸாா் வழக்குப் பதிந்து முருகனை கைது செய்தனா். அவரிடமிருந்து 39 ஆடுகளையும் மீட்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →