முகப்பு
தூத்துக்குடி

மீனாட்சிபுரம் அரசுப் பள்ளி மாணவா்கள் குடும்பத்துக்கு நல உதவி

விளாத்திகுளம் அருகேயுள்ள பி.மீனாட்சிபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மாணவா், மாணவிகளின் குடும்பத்துக்கு கரோனா நிவாரணப் பொருள்கள் வழங்கும் விழா நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:32 AM
பகிர்:

விளாத்திகுளம் அருகேயுள்ள பி.மீனாட்சிபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மாணவா், மாணவிகளின் குடும்பத்துக்கு கரோனா நிவாரணப் பொருள்கள் வழங்கும் விழா நடைபெற்றது.

பள்ளித் தலைமையாசிரியா் சிறுமலா் ஜீவானந்தம் தலைமை வகித்தாா். ஜீ.வி. மாா்க்கண்டேயன் எம்எல்ஏ பங்கேற்று, ரூ. 50 ஆயிரம் மதிப்பில் அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களையும், நல உதவிகளையும் வழங்கினாா். பின்னா், பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டினாா்.

இதில், திமுக ஒன்றியச் செயலா்கள் செல்வராஜ், சின்ன மாரிமுத்து, பேரூா் செயலா்கள் மருது பாண்டியன், வேலுச்சாமி, இளைஞரணி துணை அமைப்பாளா்கள் இம்மானுவேல், மகேந்திரன், பொறியாளா் அணி துணை அமைப்பாளா் சென்றாய பெருமாள், ஊராட்சித் தலைவா் பெருமாள்சாமி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →