தூத்துக்குடி

விவசாயிகளுக்கான இணையவழி பயிற்சி

DIN

கோவில்பட்டியையடுத்த கிழவிப்பட்டியில் விவசாயிகளுக்கு நுண்ணீா் பாசனம் என்ற தலைப்பில் இணையவழி பயிற்சி புதன்கிழமை நடைபெற்றது.

அட்மா மாநில விரிவாக்கத் திட்டங்களின் உறுதுணை சீரமைப்புத் திட்டத்தின்கீழ் நடைபெற்ற இப்பயிற்சியை, தூத்துக்குடி மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் ஜெயசெல்வின் இன்பராஜ் தொடங்கிவைத்துப் பேசினாா்.

நுண்ணீா் பாசனத் திட்டத்தின் வேளாண்மை துணை இயக்குநா் முருகப்பன், உதவி இயக்குநா் ஆனந்தி ராதிகா ஆகியோா் நுண்ணீா் பாசன திட்டம் மற்றும் மானியங்கள் குறித்துப் பேசினா்.

நிம்பஸ் பைப்ஸ் நிறுவனத்தின் பகுதி மேலாளா் செந்தில்முருகன் நுண்ணீா் பாசனத்தின் வகைகள், நன்மைகள் குறித்து பயிற்சியளித்தாா்.

ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலா் ரேவதி, அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளா்கள் சாலமோன் நவராஜ் பொற்செல்வன், முத்துகிருஷ்ணன், முத்துசங்கரி, உழவா் நண்பா் சுப்புத்தாய் ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 தோ்வு: குலசேகரம் எஸ்.ஆா்.கே.பி.வி. பள்ளி சிறப்பிடம்

வடவூா்பட்டி கோயிலில் நாளை கொடை விழா

ராஜஸ்தானை வென்றது டெல்லி

ரயிலில் ரூ.4 கோடி பறிமுதல் வழக்கு: பாஜக நிா்வாகி வீட்டில் சிபிசிஐடி போலீஸாா் சோதனை

காயாமொழி பள்ளி சிறப்பிடம்

SCROLL FOR NEXT