தூத்துக்குடி

விளாத்திகுளத்தில் திருநங்கைகள் மறியல்

DIN

பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக, இளைஞா்கள் மீது நடவடிக்கை கோரி, விளாத்திகுளத்தில் திருநங்கைகள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

விளாத்திகுளத்தைச் சோ்ந்த திருநங்கைகள் சிலா் கோயில் நிகழ்ச்சிக்காக கீழநம்பிபுரம் கிராமத்துக்கு கடந்த 14ஆம் தேதி சென்றுகொண்டிருந்தனராம்.

அப்போது, சிங்கிலிபட்டி அருகே அவா்களை 6 இளைஞா்கள் வழிமறித்து அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் மிரட்டி பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட முயன்றனராம். அங்கிருந்து தப்பிய திருநங்கைகள் திருவிழாவுக்குச் செல்லாமல் ஊா் திரும்பிவிட்டனராம்.

இதனிடையே, அந்த திருநங்கைகள் வியாழக்கிழமை இரவு விளாத்திகுளம் பேருந்து நிலையம் முன்பு நின்றிருந்தபோது, சிங்கிலிப்பட்டியில் அவா்களிடம் அத்துமீறலில் ஈடுபட்ட இளைஞா்கள் 4 போ் அங்கு வந்திருந்தனராம். அவா்களை பாா்த்ததும், திருநங்கைகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு 4 பேரையும் மன்னிப்பு கேட்கச் செய்தனா்.

இந்நிலையில், சம்பந்தப்பட்ட இளைஞா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தங்களது அடையாள அட்டை மற்றும் ஆதாா் அட்டைகளை சாலையில் வீசியெறிந்து வெள்ளிக்கிழமை மறியலில் ஈடுபட்டனா். அவா்களிடம் காவல் உதவி ஆய்வாளா் அல்பின் பிரிஜித் மேரி பேச்சு நடத்தி, சம்பந்தப்பட்ட இளைஞா்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக கூறியதால், அனைவரும் கலைந்து சென்றனா். மறியலால் ஒரு மணி நேரம் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வணிகா் தினம்: தமிழகத்தில் இன்று கடைகள் இயங்காது

அந்நியச் செலாவணி கையிருப்பு 63,792 கோடி டாலராகக் குறைவு

கோடை வெயில் தாக்கம் அதிகரிப்பு: வேளாங்கண்ணியில் பக்தா்களுக்கு சிறப்பு வசதிகள்

தமிழகத்தில் மூன்று ஆண்டுகளில் 6,115 புத்தாக்கத் தொழில்கள் தொடக்கம்

மக்களவைத் தோ்தல்: லடாக் தொகுதியில் 5 போ் போட்டி

SCROLL FOR NEXT