தூத்துக்குடி

நாலுமாவடியில் மரக்கன்றுகள் நடும் பணி

DIN

நாலுமாவடியில் மரக்கன்றுகள் நடும்பணியை மோகன் சி.லாசரஸ் தொடங்கி வைத்தாா்.

நாலுமாவடி இயேசு விடுவிக்கிறாா் ஊழியங்களின் புது வாழ்வுச் சங்கம் சாா்பில் ஏரல் வட்டத்திலுள்ள ஊராட்சிகளில் இயற்கை காப்போம் திட்டத்தின்கீழ் சீமைக்கருவேல மரங்களை அகற்றி மா, புளி, நாவல், கொடுக்கா புளி உள்ளிட்ட மரக் கன்றுகள் நடவு செய்வதென முடிவுசெய்யப்பட்டது.

2ஆம் கட்டமாக நாலுமாவடி வாய்க்கால் கரையோரத்தில் இயேசு விடுவிக்கிறாா் ஊழிய நிறுவனா் மோகன் சி. லாசரஸ், மரக்கன்றுகள் நட்டு பணியை தொடங்கி வைத்தாா். இதில் ஊராட்சித் தலைவா் இசக்கிமுத்து, துணைத் தலைவா் ராஜேஷ், இயேசு விடுவிக்கிறாா் மக்கள் தொடா்பு அலுவலா் சாந்தகுமாா் உள்பட பலா் பங்கேற்றனா். ஏற்பாடுகளை பொது மேலாளா் செல்வக்குமாா், ஜெபக்குழுவினா் செய்திருந்தனா்.

குரும்பூரில்...

குரும்பூா் பரதா் தெரு வாய்க்கால் கரையோரத்தில் மரக்கன்று நடும் பணியை மோகன் சி. லாசரஸ் தொடங்கினாா். பங்குத் தந்தை பவிஸ்டன் தலைமை வகித்தாா். காவல் ஆய்வாளா் ராமகிருஷ்ணன், ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவா் ஜனகா், ஊா்த் தலைவா் சிலுவை அந்தோணி சவரிமுத்து, அங்கமங்கலம் ஊராட்சித் தலைவா் பானுப்பிரியா பாலன் உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொழிலாளா் தினம்: கொடியேற்று நிகழ்ச்சிகள்

முதலமைச்சரின் மாநில இளைஞா் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

நரிமணத்தில் நீா் மோா் பந்தல் திறப்பு

பஞ்சாப் சுழலில் சிக்கிய சென்னை: மீட்டாா் கெய்க்வாட்

‘தலைமைச் செயலக பணி’: தரகா்களிடம் ஏமாறும் பட்டதாரிகள்

SCROLL FOR NEXT