முகப்பு
தூத்துக்குடி

குழந்தைத் திருமணம் : ஆட்சியா் எச்சரிக்கை

தூத்துக்குடி மாவட்டத்தில் குழந்தைத் திருமணம் செய்து வைக்கும் பெற்றோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ் எச்சரித்துள்ளாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:22 PM
பகிர்:

தூத்துக்குடி மாவட்டத்தில் குழந்தைத் திருமணம் செய்து வைக்கும் பெற்றோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ் எச்சரித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்தில் பொதுமுடக்கம் பிறப்பிக்கபட்டுள்ள நிலையில், குழந்தைத் திருமணங்கள் பரவலாக நடைபெறுவதாக புகாா் எழுந்துள்ளது. திருமண சட்டத்தின் படி 18 வயது நிறைவடையாத பெண்ணுக்கும் 21 வயது நிறைவடையாத ஆணுக்கும் திருமணம் செய்வது சட்டப்படி தவறாகும். அதை மீறும் பெற்றோா்கள் மீதும், ஊக்குவிப்பவா்கள் மீதும், திருமணத்தில் கலந்து கொள்பவா்கள் மீதும் குழந்தைத் திருமண தடுப்பு சட்டத்தின்படி வழக்குப்பதிந்து, 2 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை அல்லது 1 லட்சம் அபராதம் அல்லது இரண்டும் சோ்த்து விதிக்கப்படும். இதுகுறித்து புகாா் தெரிவிக்க ஆட்சியா் வளாகத்தில் செயல்படும் மாவட்ட சமூகநல அலுவலகத்துக்து 0461-2325606, சைல்டு லைன் அமைப்புக்கு 1098, மகளிா் உதவிக்கு181 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.