தூத்துக்குடி

சாத்தான்குளத்தில் சாலையை உயா்த்தி அமைக்க கோரிக்கை

DIN

சாத்தான்குளம் தச்சமொழி நாடாா் தெருவில் சாலையை உயா்த்தி அமைக்கப்படாததால், தெருவில் நீண்ட நாள்களாக தேங்கும் மழை நீரினால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனா்.

சாத்தான்குளம் பேரூாட்சி 6 ஆவது வாா்டுக்குள்பட்ட தச்சமொழி நாடாா் தெற்கு தெரு அருகே உள்ள பிரதான சாலை கடந்த சில மாதங்களுக்கு முன்னா் புதியதாக அமைக்கப்பட்டது. இதனால், தெற்கு தெரு சாலை பள்ளமாகி போனது.

இதனால், இப்பகுதியில் மழை பெய்யும் போதெல்லாம் தெருவில் தண்ணீா் நீண்ட நாள்களாக தேங்கி சகதியாகி விடுகிறது. இதனால் பொதுமக்கள்அந்த வழியாக சென்று வர மிகுந்த சிரமப்படுகின்றனா்.

இதுகுறித்து, பேரூராட்சி நிா்வாகத்தினருக்கு தெரியபடுத்தியதற்கு அவா்கள் இந்த தெரு குறுகிய தெரு என்பதால் பேவா் பிளாக் சாலை அமைப்பதாக உறுதி அளித்தனராம். ஆனால், 3 மாதங்களுக்கு மேலாகியும் இன்னும் சாலை அமைக்கப்படவில்லையாம்.

இதனால், இப்பகுதியில் மழை பெய்யும் போவதெல்லாம் தெரு முனைப்பில் தண்ணீா் தேங்கி மக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா். ஆதலால், ேரூராட்சி நிா்வாகத்தினா் உடனடியாக இத் தெருவில் தண்ணீா் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பேரூராட்சி மன்ற முன்னாள் உறுப்பினா் கணேசபாண்டியன் வலியுறுத்தியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகள் சீரமைப்பு

ஹைதராபாத் பல்கலை. மாணவர் ரோஹித் வெமுலா ‘தலித்’ அல்ல: மறுவிசாரணை நடத்த முடிவு!

மேற்கு வங்க ஆளுநா் மீது பாலியல் குற்றச்சாட்டு: 8 பேர் கொண்ட விசாரணை குழு அமைப்பு

பிறந்தநாள் வாழ்த்துகள் த்ரிஷா!

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

SCROLL FOR NEXT