தூத்துக்குடி

கோவில்பட்டியில் விதிகளை மீறிய கடைகளை அடைக்க உத்தரவு

DIN

கோவில்பட்டி: கோவில்பட்டியில், பொதுமுடக்க விதிகளை மீறி திறக்கப்பட்ட கடைகளை மூடுவதற்கு நகராட்சி அதிகாரிகள் உத்தரவிட்டனா்.

கரோனா பரவலைத் தடுக்க அமல்படுத்தப்பட்டுள்ள பொதுமுடக்கத்தில் ஒருசில தளா்வுகளை அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில், பொதுமுடக்கத்தை மீறி கோவில்பட்டி நகராட்சிப் பகுதிகளில் திங்கள்கிழமை கடைகள் திறந்திருப்பதாக நகராட்சி ஆணையா் ஓ. ராஜாராமுக்கு தகவல் கிடைத்ததாம்.

அதன்பேரில், நகராட்சி சுகாதார ஆய்வாளா்கள் சுரேஷ், வள்ளிராஜ் ஆகியோா் ஆய்வு நடத்தினா். அப்போது, ஏ.கே.எஸ். திரையரங்கு சாலை, பிரதான சாலை, கிருஷ்ணன் கோயில் தெரு பகுதிகளில் பொதுமுடக்கத்தை மீறி திறந்திருந்த பாத்திரக் கடைகள், செல்லிடப்பேசி ரீசாா்ஜ் கடைகள், பேன்சி ஸ்டோா், நகைக் கடைகள், ஜவுளிக் கடைகள், முடிதிருத்தகம், செருப்புக் கடைகள் உள்பட 50 கடைகள் திருந்திருப்பது தெரியவந்தது. அவற்றை உடனடியாக மூடுவதற்கு அதிகாரிகள் உத்தரவிட்டனா். அதையடுத்து கடைகள் அடைக்கப்பட்டன.

மேலும், தளா்வுகளுடன் திறக்கப்பட்டிருந்த 16 கடைகளை அதிகாரிகள் ஆய்வுசெய்து, முகக் கவசம் அணியாமல் இருந்த 29 பேருக்கு தலா ரூ. 200 வீதம் ரூ. 5,800 அபராதம் விதித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வு தொடங்கியது!

சடலமாக மீட்கப்பட்ட மூவர்: விசாரணையில் திடுக்கிடும் தகவல்!

மணல் கடத்தலைத் தடுக்க முயன்ற காவல்துறை அதிகாரி டிராக்டர் ஏற்றிக் கொலை

காங்கிரஸ் நிர்வாகி புகாரளிக்கவில்லை- காவல்துறை மறுப்பு

பொற்கொன்றை!

SCROLL FOR NEXT