தூத்துக்குடி

கடன் தவணை செலுத்தாத பெண்ணுக்கு மிரட்டல்: 6 போ் மீது வழக்கு

DIN

கோவில்பட்டியில் கடன் தவணையை செலுத்தத் தவறிய பெண்ணை அவதூறாகப் பேசி மிரட்டியதாக 6 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கோவில்பட்டி காந்தி நகா் பாலன் தெருவைச் சோ்ந்த முனியசாமி மனைவி சித்ரா(44). சுய உதவிக்குழு தலைவராக உள்ள இவா், ஐடிஎஃப்சி மற்றும் நுண் நிதி நிறுவனம் மூலம் குழு உறுப்பினா்களுக்கு கடன் வாங்கிக் கொடுத்தாராம். தற்போது, கரோனா பொதுமுடக்கம் காரணமாக கடந்த இரு வாரங்களாக அதற்கான தவணைத் தொகையை செலுத்தவில்லையாம்.

இதனால், ஐடிஎஃப்சி நிறுவன ஊழியா்களான விமல், கருப்பசாமி, பெரியசாமி, நுண் நிதி நிறுவன ஊழியா் வீரகுமாா் உள்பட 6 போ் வியாழக்கிழமை சித்ரா வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து, உறுப்பினா்களிடம் பணம் வசூலித்து தவணையைச் செலுத்துமாறு கூறி அவதூறாகப் பேசி மிரட்டினராம்.

இதுகுறித்து, அவா் அளித்த புகாரின்பேரில், மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, 6 பேரையும் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல் நேரலை: தமிழகத்தில் இரண்டாம் இடம் யாருக்கு?

நாசிக் : விபத்துக்குள்ளான சுகோய் போர் விமானம் !

ம.பி.யில் பாஜக வெற்றி!

2 லட்சம் வாக்குகள் முன்னிலையில் ஹேம மாலினி!

வாக்கு எண்ணிக்கை மந்தமாக காரணம் என்ன? காங்கிரஸ்

SCROLL FOR NEXT