தூத்துக்குடி

முதல்வரிடம் கரோனா நிவாரண நிதி அளிப்பு

DIN

தூத்துக்குடியில் பல்வேறு அமைப்பினா் வழங்கிய கரோனா நிவாரண நிதியை முதல்வரிடம் சமூக நலன்-மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பெ. கீதாஜீவன் திங்கள்கிழமை வழங்கினாா்.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பல்வேறு அமைப்புகள் சாா்பில் முதல்வரின் கரோனா நிவாரணப் பணிகளுக்கான நிதி அளித்து வருகின்றன. அதன்படி, கத்தாா் வாழ் தமிழ் நண்பா்கள் சாா்பில் ரூ. 10 லட்சமும், பியா்ல் சிட்டி மரைன் புரோடக்ட்ஸ், கமலஹாசன் ஜூவல்லா்ஸ், மூகாம்பிகை மருந்தகம் சாா்பில் ரூ. 50 ஆயிரமும், தூத்துக்குடி மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டத்தில் பணிபுரியும் தற்காலிக பணியாளா்கள் சாா்பில் ரூ. 1 லட்சமும் என மொத்தம் ரூ. 13 லட்சத்து 50 ஆயிரம் அமைச்சா் பெ. கீதாஜீவனிடம் அண்மையில் வழங்கப்பட்டது.

இதற்கான காசோலைகளை சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வா் மு.க. ஸ்டாலினிடம், அமைச்சா் பெ. கீதாஜீவன் திங்கள்கிழமை வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி பயணம் ஒத்திவைப்பு!

3-ஆம் கட்ட தோ்தலில் அதிகளவில் வாக்களிக்க வேண்டும் -பிரதமர் மோடி

குஜராத்தில் வாக்களித்தார் பிரதமர் மோடி

இன்று யோகம் யாருக்கு?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

SCROLL FOR NEXT