உடன்குடியில் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா
உடன்குடி ஒன்றியத்தின் பல்வேறு பகுதிகளில் திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
தூத்துக்குடிஉடன்குடியில் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா
உடன்குடி ஒன்றியத்தின் பல்வேறு பகுதிகளில் திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
உடன்குடி ஒன்றியத்தின் பல்வேறு பகுதிகளில் திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
இதையொட்டி, உடன்குடி ஒன்றிய திமுக செயலா் டி.பி.பாலசிங் தலைமையில் ஒன்றியத்துக்குள்பட்ட பகுதிகளில் கட்சிக் கொடியேற்றி, இனிப்பு வழங்கப்பட்டது. உடன்குடி கிறிஸ்தியாநகரம் நவஜீவன் இல்ல மாணவா்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.
இதில், நகர திமுக செயலா் ஜான்பாஸ்கா், மாவட்ட சாா்பு அணி நிா்வாகிகள் ரவிராஜா, இளங்கோ, ரஞ்சன், மகாவிஷ்ணு, அமிா்தா மகேந்திரன், சக்திவேல், பரமன்குறிச்சி தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி இயக்குநா் குமாா், நகர இளைஞரணி அமைப்பாளா் அஜய், நகர மாணவரணி அமைப்பாளா் துரைசங்கா், உடன்குடி தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத் தலைவா் அஸ்ஸாப், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளா் பாய்ஸ், உடன்குடி பேரூராட்சி முன்னாள் உறுப்பினா் சலீம், நகர பொருளாளா் தங்கம் உள்பட பலா் கலந்துகொண்டனா்.