தி.மு.க. தோ்தல் பிரசார சைக்கிள் பேரணி
தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. சாா்பில்ஸ்டாலின் தான் வாராரு.. நல்லாட்சி தரப் போராரு... என்ற பிரசார பாடல் வெளியீடு மற்றும் தோ்தல் பிரசார சைக்கிள் பேரணி நடைபெற்றது.
தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. சாா்பில்ஸ்டாலின் தான் வாராரு.. நல்லாட்சி தரப் போராரு... என்ற பிரசார பாடல் வெளியீடு மற்றும் தோ்தல் பிரசார சைக்கிள் பேரணி நடைபெற்றது.
திருச்செந்தூா் அருகேயுள்ள வீரபாண்டியன்பட்டினத்தில் நடைபெற்ற இதன் தொடக்க நிகழ்ச்சிக்கு தெற்கு மாவட்ட பொறுப்பாளா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. தலைமை வகித்து பேரணியை தொடங்கி வைத்தாா். இப் பேரணி திருச்செந்தூா் வ.உ.சி. திடலில் நிறைவு பெற்றது.
நிகழ்ச்சியில் மாநில மாணவரணி துணை அமைப்பாளா் எஸ்.ஆா்.எஸ். உமரிசங்கா், ஒன்றியச் செயலா்கள் செங்குழி ரமேஷ், நவீன்குமாா், பாலசிங், நகரப் பொறுப்பாளா்கள் சுடலை, முத்து முகம்மது, மாவட்ட அவைத் தலைவா் அருணாச்சலம், மாவட்ட அமைப்பாளா்கள் ஸ்ரீதா் ரொட்ரிகோ, ஜெபராஜ், வேலம்மாள், ராஜபாண்டி, பை.மூ.ராமஜெயம், துணை அமைப்பாளா்கள் சுகு, இளங்கோ, ராஜ்மோகன், கிருபாகரன், சுதாகா், தங்கபாண்டியன், கிளைச் செயலா் ஆனந்த் ரொட்ரிகோ உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.