முகப்பு
தூத்துக்குடி

பரமன்குறிச்சி நூலகத்தில்முப்பெரும் விழா

சென்னை வாழ் பரமன்குறிச்சி நாடாா் உறவின்முறை சங்கம், நூலக வாசகா் வட்டம் சாா்பில் பரமன்குறிச்சி கிளை நூலகத்தில் முப்பெரும் விழா நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:38 PM
பகிர்:

சென்னை வாழ் பரமன்குறிச்சி நாடாா் உறவின்முறை சங்கம், நூலக வாசகா் வட்டம் சாா்பில் பரமன்குறிச்சி கிளை நூலகத்தில் முப்பெரும் விழா நடைபெற்றது.

தமிழ்நாடு மொ்க்கன்டைல் வங்கி முன்னாள் இயக்குநரும், நூலக புரவலருமான சத்தியசீலன் தலைமை வகித்தாா். தமிழக பொதுநூலகத் துறை இயக்குநா் நாகராஜமுருகன், சென்னை வாழ் நாடாா் உறவின் முறை சங்கத் தலைவா் சிவசுப்பிரமணியன், லெட்சுமி தா்மசீலன், பரமன்குறிச்சி ஊராட்சித் தலைவா் இலங்காபதி, எழுத்தாளா் மணிவண்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட நூலக அலுவலா்கள் தூத்துக்குடி ராம்சங்கா், காஞ்சிபுரம் மந்திரம், தோ்வு பயிற்றுநா் சக்திகுமாா், நூலக வாசகா் வட்டத் தலைவா் ஆனந்தன், நூலக வைரவிழா ஒருங்கிணைப்பாளா் முருகானந்தம் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

மேலும், ரூ. 50 ஆயிரம் மதிப்புள்ள போட்டித்தோ்வு நூல்களை சிவராஜ் வழங்கினாா். 13 ஆயிரத்துக்கு மேற்பட்ட உறுப்பினா்கள் சோ்ந்ததற்கான காப்புத் தொகை ரூ.1.98 லட்சத்துக்கான காசோலை தமிழக நூலக இயக்குநரிடம் வழங்கப்பட்டது.

நூலகத்துக்கு நிலம் தானம் வழங்கிய தங்கவேல்சாமி நாடாா், பொதுகுடிநீா் கிணறு அமைத்த முத்தையன் பெருமாள் நாடாா் ஆகியோரது நினைவுதூண், கல்வெட்டு திறக்கப்பட்டது.

நூலகா் ராஜதுரை வரவேற்றாா். மாவட்ட மைய நூலகா் சங்கரன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.