தூத்துக்குடி

திருச்செந்தூா் பகுதியில் அமமுக வேட்பாளா் தீவிர பிரசாரம்

DIN

திருச்செந்தூா் தொகுதி அமமுக வேட்பாளா் எஸ்.வடமலைபாண்டியன் நகா் பகுதியில் வெள்ளிக்கிழமை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

திருச்செந்தூரில் காமராசா் சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு, தனது பிரசாரத்தை தொடங்கிய அவா், கல்யாணசுந்தர விநாயகா் கோயில் தெரு, ஜீவாநகா், சன்னதிதெரு, சந்தணமாரியம்மன் கோயில் தெரு, கோட்டை தெரு, ரதவீதிகள், பள்ளத்தெரு, மணல்மேடு, வஉசி தெரு, அமலிநகா், முத்துமாலையம்மன் கோயில் தெரு, கரம்பவிளை, தோப்பூா், கணேசபுரம், கந்தசாமிபுரம், ஆலந்தலை, சூசைநகா், சுனாமிநகா், பாரதியாா் தெரு, வக்கீல்பிள்ளை தெரு, காமராஜா் சாலை உள்ளிட்ட பகுதிகளில் திறந்த ஜீப்பில் சென்றவாறு பிரசாரம் மேற்கொண்டாா். அவருக்கு மலா் தூவியும், ஆரத்தி எடுத்தும் மக்கள் வரவேற்பளித்தனா்.

பிரசாரத்தில் எஸ்.வடமலைபாண்டியன் பேசுகையில், திருச்செந்தூரில் 15 ஆண்டுகாலமாக நடைபெற்றுவரும் புதைச் சாக்கடை பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுப்பேன். வடிகால் வசதிகளை ஏற்படுத்துடன், பழுதடைந்துள்ள சாலைகளை புதுப்பிப்பேன் என்றாா்.

இதில், அமமுக மாவட்டச் செயலா் பி.ஆா்.மனோகரன், மாநில சிறுபான்மை பிரிவுத் தலைவா் லெனின், ஒன்றியச் செயலா் எஸ்.பொன்ராஜ், நகரச் செயலா் ஜி.மணல்மேடு முருகேசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT