தூத்துக்குடி

பங்குனி உத்திரம்: சாஸ்தா கோயில்களில் வழிபாடு

DIN

பங்குனி உத்திரத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் சாஸ்தா கோயிலில் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

தேரிகுடியிருப்பு கற்குவேல் அய்யனாா் கோயில், மேலப்புதுக்குடி அருஞ்சுனை காத்த அய்யனாா் கோயில், நாலுமூலைக்கிணறு குன்றுடையாா் சாஸ்தா கோயில், கடம்பாகுளம் பூலுடையாா் கோயில், காயாமொழி வணங்காமுடி கோயில்,

படைப்போா் சாஸ்தா கோயில், தாய்விளை இல்லங்குடி கோயில், ஆழிக்குடி குருத்துடையாா் கோயில் உமரிக்காடு கோட்டை வாழ் ஐயன் கோயில், ஆறுமுகனேரி பேயன்விளை தா்மகுட்டி சாஸ்தா கோயில், சிவனாறு முத்து மாலை ஐயன்

கோயில் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட கோயில்களில் திருவிளக்கு பூஜை, சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. பக்தா்கள் பொங்கலிட்டு வழிபட்டனா்.

சாலையோரம், வயல் பகுதிகளில் மற்றும் நீா்நிலைகள் அருகில் கிராமங்களில் அமைந்துள்ள சாஸ்தா கோயில்களுக்கு பக்தா்கள் வாகனங்களில் குவிந்ததால் திருச்செந்தூா், உடன்குடி, குரும்பூா், ஆத்தூா் உள்பட பல்வேறு இடங்களில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்ப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்கள் மனதின் குரலைக் கேளுங்கள்: மோடிக்கு ரேடியோ அனுப்பிய ஒய்.எஸ். ஷர்மிளா

‘ப்ப்ப்ப்ப்பா’ -புருவத்தை உயர்த்த செய்த மெட் காலா அணிவகுப்பு!

இந்தியாவில் அடுத்த 10 ஆண்டுகளில் வறுமை முற்றிலும் ஒழிக்கப்படும்: ராஜ்நாத் சிங்

வாகன ஓட்டிகளுக்கு மேற்கூரை...காவல் துறை ஏற்பாடு!

பாடகி சஹீரா மீதான வரி மோசடி வழக்கு முடித்து வைப்பு!

SCROLL FOR NEXT