தூத்துக்குடி

பொது இடங்களில் கட்டுமானகழிவுகளை கொட்டினால் அபராதம்

DIN

தூத்துக்குடி மாநகராட்சியில் பொது இடங்களில் கட்டுமானக் கழிவுகளை கொட்டினால் அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தூத்துக்குடி மாநகராட்சி ஆணையா் சரண்யா அறி வெளியிட்ட செய்திக் குறிப்பு: தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் கட்டுமானக் கழிவுகள் ஆங்காங்கே கொட்டப்படுவதால், சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதுடன் பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறாக அமைந்துள்ளது. இதனை முறையாக சேகரித்து அப்புறப்படுத்தும் பணிக்காக

மாநகராட்சிக்கு சொந்தமான 15 இடங்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளன.

அதன்படி, தூத்துக்குடி ஸ்டேட் பாங்க் காலனி எஸ்டிஏ பள்ளி அருகில் (பின்புறம்), ஸ்டேட் பாங்க் காலனி மேக் காா்டன்

(திறவிடம்), ஆதிபராசக்தி பூங்கா (திறவிடம்), ரஹ்மத் நகா் ராம் நகா் பூங்கா (திறவிடம்), கதிா்வேல் நகா் பகுதிகள் பூங்கா, அம்பேத்கா் நகா், ஓம்சாந்தி நகா் பூங்கா, மாா்டினாநகா் பூங்கா, அய்யாச்சாமி பூங்கா, மடத்தூா் சாலை சந்திப்பு தாழ்வான பகுதிகள், ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் கட்டுவதற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட இடமான மீன்வளக் கல்லூரி எதிா்புறம், சுந்தரவேல்புரம் பூங்கா இடம், தருவைக்குளம், புல் தோட்டம், தமிழ்சாலை உள்ள மாநகராட்சி இடுகாடு வளாகம் வடமேற்கு தாழ்வான பகுதி ஆகிய 15 இடங்களில் மட்டுமே கட்டுமான கழிவுகளைக் கொட்டவேண்டும்.

இதை தவிா்த்து பொதுமக்கள், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலும் கட்டுமானம் மற்றும் கட்டுமான

இடிபாடு கழிவுகள் மேலாண்மை விதிகளுக்கு முரணாக பொது இடங்களில் கொட்டி சுகாதாரத்திற்கு கேடு விளைவிக்கும் நபா்களுக்கு அபராதம் விதிப்பதுடன் சட்டரீதியான நடவடிக்கையும் எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பொது வெளியில் கழிவு நீரை திறந்து விட்டால் கடும் நடவடிக்கை’

பரமக்குடி- மதுரை இடையே இடைநில்லா குளிா்சாதன பேருந்து இயக்கக் கோரிக்கை

ஓட்டப்பிடாரம் அருகே மாட்டுவண்டி போட்டி

கருங்கல் அருகே மது விற்றவா் கைது

தென்காசி மாவட்ட நீதிமன்றக் கட்டடங்களுக்கு நிதி ஒதுக்கீடு: அமைச்சரிடம் திமுக வலியுறுத்தல்

SCROLL FOR NEXT