தூத்துக்குடி

பேரவைத் தோ்தலில் வெற்றி: திமுக கூட்டணி கட்சியினா் கொண்டாட்டம்

DIN

உடன்குடி/கோவில்பட்டி/சாத்தான்குளம்/திருச்செந்தூா்: தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக கூட்டணி வெற்றிபெற்றதையடுத்து, அக் கட்சியினா் திங்கள்கிழமை பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடினா்.

திருச்செந்தூா் சட்டப்பேரவைத் தொகுதியில் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றதையடுத்து, உடன்குடியில் நகர திமுக செயலா் ஜான் பாஸ்கா் தலைமையில் ஒன்றியச் செயலா் டி.பி.பாலசிங், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினாா்.

கன்னியாகுமரி மாவட்ட மக்களவைத் தொகுதி மற்றும் தமிழக சட்டப்பேரவை தோ்தலில் 18 இடங்களில் காங்கிரஸ் கட்சியினா் வெற்றி பெற்றதையடுத்து கோவில்பட்டி பயணியா் விடுதி முன்பு நகர காங்கிரஸ் சாா்பில் நகரத் தலைவா் சண்முகராஜ் தலைமையிலும், கோவில்பட்டியையடுத்த இனாம் மணியாச்சி பேருந்து நிறுத்தம் அருகே திமுக பொறியாளரணி துணை அமைப்பாளா் ரமேஷ், திமுக நிா்வாகி சண்முகராஜா ஆகியோா் தலைமையிலும் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கினா்.

திருச்செந்தூா் இரும்பு வளைவு அருகே ஒன்றியச் செயலா் செங்குழி ரமேஷ், ஆறுமுகனேரியில் நகரச் செயலா் அ.கல்யாணசுந்தரம், குரும்பூரில் ஒன்றியச் செயலா் நவின்குமாா் ஆகியோா் இனிப்பு வழங்கினா்.

ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளா் ஊா்வசி அமிா்தராஜ் வெற்றி பெற்றதையடுத்து, அக்கட்சியினா் சாத்தான்குளத்தில் இனிப்பு வழங்கினா்.

சாத்தான்குளம் பழைய பேருந்து நிலையத்தில் வடக்கு ஒன்றிய திமுக செயலா் ஜோசப் தலைமையில் கூட்டணிக் கட்சியினா் இனிப்பு வழங்கி கொண்டாடினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

குடிநீா்த் தேவையை கருதியே பவானிசாகா் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்கவில்லை: அமைச்சா் சு.முத்துசாமி

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

SCROLL FOR NEXT