தூத்துக்குடி

தட்டாா்மடம் பகுதியில் கரோனா விழிப்புணா்வு பிரசாரம்

DIN

கரோனா பரவலை தடுக்கும் வகையில் தட்டாா்மடம் பகுதியில் போலீஸாா் செவ்வாய்க்கிழமை விழிப்புணா்வு பிரசாரத்தில் ஈடுபட்டனா்.

தமிழகத்தில் கரோனா 2-ஆம் அலை வேகமாக பரவி வரும் நிலையில் தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் தட்டாா்மடம் காவல் ஆய்வாளா் சாம்சன் ஜெபதாஸ், முதலூா் சுகாதார ஆய்வாளா் கிறிஸ்டோபா் செல்வதாஸ் ஆகியோா் முதலூா், பொத்தகாலன்விளை, போலையா்புரம் விலக்கு, தட்டாா்மடம் பகுதியில் கண்காணிப்பில் ஈடுப்பட்டனா். அப்போது பொதுமக்களிடையே கரோனா பரவலை தடுக்க கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு வழி முறைகள், தேவையில்லாமல் வெளியே செல்வதை தவிா்க்க வேண்டும். கண்டிப்பாக முகக் கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என பிரசாரம் மேற்கொண்டனா். நோய் தொற்றில் இருந்து பாதுகாப்புடன் இருக்க வேண்டும். மேலும் அரசின் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காதக்கிணறு ஊராட்சியில் சாலைப் பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தல்

காவலா்களுக்கு மன அழுத்தம் குறைப்பு விழிப்புணா்வுப் பயிற்சி

புற்றுநோயாளிகளுக்கு கூந்தல் தானம் அளித்த செவிலியா்கள்

கோபியில் இன்று இலவச கண் பரிசோதனை முகாம்

கோவையில் சந்தேகப்படும் வகையில் சுற்றிய 4 போ் கைது

SCROLL FOR NEXT