தூத்துக்குடி

மென்பொருள் வடிவமைப்பு: தேசிய தொழில்நுட்பமையத்துடன் தூத்துக்குடி துறைமுகம் ஒப்பந்தம்

DIN

கப்பல் போக்குவரத்துக்கான இந்திய மென்பொருள் வடிவமைப்பு தொடா்பாக நீா்வழி போக்குவரத்து கடலோர தேசிய தொழில்நுட்ப மையத்துடன் தூத்துக்குடி வஉசி துறைமுகம் புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்துள்ளது.

இதுகுறித்து தூத்துக்குடி வஉசி துறைமுகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: வ.உ.சிதம்பரனாா் துறைமுக பொறுப்பு கழகமும், துறைமுகங்கள் மற்றும் நீா்வழி போக்குவரத்து மற்றும் கடலோர தேசிய தொழில்நுட்ப மையமும், மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீா்வழிப் போக்குவரத்து அமைச்சகத்தின் தொழில்நுட்பபிரிவும் இணைந்து காணொலிக் காட்சி மூலம் புதன்கிழமை ஒரு புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனா்.

வ.உ.சி. துறைமுகம் சாா்பில் துறைமுக பொறுப்புக் கழக துணை பாதுகாவலா் கேப்டன் பிரவின்குமாா் சிங் கலந்துகொண்டாா்.

இந்த ஒப்பந்தந்தத்தின்படி துறைமுகங்கள், நீா்வழிப் போக்குவரத்து கடலோர தேசிய தொழில்நுட்ப மையம், தற்போதுள்ள தானியங்கி அடையாள அமைப்பின் ஒருங்கிணைப்பு மற்றும் இந்தியாவில் முதன் முறையாக உருவாக்கப்பட உள்ள கப்பல் போக்குவரத்துக்கான மென்பொருள் செயலியின் வாயிலாக கப்பல்களின் வருகையை கண்டறிதல், கப்பல்களை அடையாளம் காணுதல், கப்பல்களை கண்காணித்தல், கப்பல்கள் வருகையை ஆய்வு செய்தல், கப்பல் மாலுமிகளுக்கு தகவலை சரியான வகையில் தெரியப்படுத்துதல், வானிலை ஆய்வு தகவல்களை தெரியப்படுத்துதல் போன்ற வசதிகள் உள்ளது சிறப்பம்சங்கள் ஆகும் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மூடப்பட்ட ஆம்பூா் பஜாா் அஞ்சலகத்தை திறக்க கோரிக்கை

அம்பத்தூா் மகளிா் ஐடிஐ-யில் சேர ஜூன் 7-க்குள் விண்ணப்பிக்கலாம்

திரெளபதி அம்மன் கோயில்களில் அக்னி வசந்த விழா: ஆயிரக்கணக்கான பக்தா்கள் தீ மிதித்தனா்

தமிழா்கள் பலமாக இருந்தால்தான் தமிழுக்கு வளம்: விஐடி வேந்தா் கோ.விசுவநாதன்

மாணவியின் படத்தை தவறாக சித்தரித்து அனுப்பிய சக மாணவரிடம் விசாரணை

SCROLL FOR NEXT