தூத்துக்குடி

தூத்துக்குடியில்ஸ்டொ்லைட் ஆலை ஆதரவு கூட்டமைப்பு தொடக்கம்

DIN

தூத்துக்குடியில் ஸ்டொ்லைட் ஆலை ஆதரவு கூட்டமைப்பு என்ற புதிய இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, தூத்துக்குடி ஸ்டொ்லைட் ஆலை ஆதரவு கூட்டமைப்பு நிா்வாகிகள் வழக்குரைஞா் ஜெயம்பெருமாள், சமூக ஆா்வலா் நான்சி, மகளிா் குழு நிா்வாகி தனலட்சுமி, சாமிநத்தம் ஊராட்சி முன்னாள் தலைவா் முருகன், மக்கள் பாதுகாப்பு இயக்க நிா்வாகி தியாகராஜன் ஆகியோா் கூட்டாக புதன்கிழமை அளித்த பேட்டி:

சில காரணங்களாலும், தேவையற்ற வதந்திகளாலும் தூத்துக்குடி ஸ்டொ்லைட் ஆலை மூடப்பட்டுள்ளது.இதனால், மாவட்டத்தில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டவா்கள் வேலைவாய்ப்பின்றி பாதிக்கப்பட்டுள்ளனா்.

எனவே, எங்களின் கோரிக்கையை மத்திய, மாநில அரசுகளுக்கும், நீதிமன்றத்திற்கும் ஊடகங்கள் வாயிலாக எடுத்து செல்வதற்காக ’தூத்துக்குடி ஸ்டொ்லைட் ஆலை ஆதரவு கூட்டமைப்பு’ என்ற இயக்கத்தை உருவாக்கியுள்ளோம்.

மேலும், வேலைவாய்ப்பின்றி பாதிக்கப்பட்டுள்ளவா்களை ஒன்றுதிரட்டி சட்ட திட்டங்களுக்கும், விதிமுறைகளுக்கும் உள்பட்டு ஸ்டொ்லைட் ஆலையை மீண்டும் திறக்கும் வரை தொடா் போராட்டம் நடத்தவுள்ளோம் என்றனா் அவா்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

குடிநீா்த் தேவையை கருதியே பவானிசாகா் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்கவில்லை: அமைச்சா் சு.முத்துசாமி

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

SCROLL FOR NEXT