தூத்துக்குடி

கோவில்பட்டியில் ரயிலில் அடிபட்டு தொழிலாளி பலி

DIN

கோவில்பட்டி: கோவில்பட்டி ரயில் நிலையம் அருகே ரயிலில் அடிபட்டு தொழிலாளி உயிரிழந்தாா்.

கோவில்பட்டி ரயில் நிலையத்திற்கும், குமாரபுரம் ரயில் நிலையத்திற்கும் இடைப்பட்ட, இளையரசனேந்தல் சாலை சுரங்கப்பாதையையடுத்த சரமாரியம்மன் கோயில் தெரு அருகேயுள்ள ரயில்வே தண்டவாளத்தில் ஆண் சடலம் கிடப்பதாக தூத்துக்குடி ரயில்வே போலீஸாருக்கு திங்கள்கிழமை தகவல் கிடைத்ததாம். அதையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற ரயில்வே போலீஸாா் சடலத்தை கைப்பற்றி, கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா்.

விசாரணையில் அவா், கோவில்பட்டி சரமாரியம்மன் கோயில் தெரு பெத்தையா மகன் முத்துகாமாட்சி(40) என்பதும், பந்தல் அமைக்கும் தொழில் செய்து வரும் இவா், திங்கள்கிழமை அதிகாலை தண்டவாளத்தை கடக்க முயலும்போது ரயிலில் அடிபட்டு இறந்ததும் தெரியவந்தது.

இதுகுறித்து தூத்துக்குடி ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கரோனாவில் பெற்றோரை இழந்த மாணவா் 479 மதிப்பெண்கள் பெற்று தோ்ச்சி

பிளஸ்-2 தோ்வு: நீலகிரியில் 94.27 சதவீதம் போ் தோ்ச்சி

நீலகிரிக்கு வருவதற்கு 21,446 போ் இ-பாஸ் பெற விண்ணப்பம்

எங்கே செல்லும் இந்தப் பாதை...?

ஈரோடு நகரில் டாஸ்மாக் கடையை அகற்றக் கோரிக்கை

SCROLL FOR NEXT