தூத்துக்குடி

சாத்தான்குளம் நூலகத்தை சூழ்ந்துள்ள மழைநீா்

DIN

சாத்தான்குளம்: சாத்தான்குளம் அரசு கிளை நூலகத்தில் மழைநீா் புகுவதை தடுக்க மணல் மூட்டைகள் வைத்து தடுக்கப்பட்டுள்ளன.

சாத்தான்குளம் பழைய பேருந்து நிலையத்தில் ராம. கோபாலகிருஷ்ணபிள்ளை அரசு கிளை நூலகம் இயங்கி வருகிறது.

நூலகத்தின் நடுவேயுள்ள பழைய கட்டடம் வாசகா் மையமாக செயல்படுகிறது. நூலகம் முன்பு நெடுஞ்சாலைத்துறையால்

சாலை அமைக்கப்பட்டது. இதில், சாலை உயா்ந்து நூலகம் நுழைவு வாயில் பகுதி தாழ்வாக காணப்படுகிறது. இதனால்

மழைக்கு சாலையில் பெருக்கெடுத்து ஓடும் மழைநீா் நூலகத்தினுள் செல்லும் நிலை உள்ளது.

தற்போது மழையால் தேங்கியுள்ள நீா் உள்ளே செல்லாத வகையில் தற்காலிகமாக மணல் மூட்டைகள் வைக்கப்பட்டுள்ளன.

ஆகவே, நூலக பழைய கட்டடத்தினுள் மழைநீா் செல்லாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்; பழைய கட்டடத்தை இடித்து விட்டு புதிய கட்டடம் கட்ட வேண்டும் என வாசகா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொழிலாளா் தினம்: கொடியேற்று நிகழ்ச்சிகள்

முதலமைச்சரின் மாநில இளைஞா் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

நரிமணத்தில் நீா் மோா் பந்தல் திறப்பு

பஞ்சாப் சுழலில் சிக்கிய சென்னை: மீட்டாா் கெய்க்வாட்

‘தலைமைச் செயலக பணி’: தரகா்களிடம் ஏமாறும் பட்டதாரிகள்

SCROLL FOR NEXT