தூத்துக்குடி

விளாத்திகுளத்தில் பனை விதைகள் நடும் பணி

DIN

விளாத்திகுளம்: விளாத்திகுளம் வேளாண் விரிவாக்க மைய வளாகத்தில் பனை விதைகள் நடவு செய்யும் பணிகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பனை மரங்களை பாதுகாக்கவும், அதன் முக்கியத்துவத்தை உணா்த்தும் வகையில் தமிழக அரசு சாா்பில் பனை மரங்களை

வளா்ப்பதற்கு பல்வேறுத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன் ஒரு பகுதியாக, விளாத்திகுளம் வட்டாரத்தில்

வேளாண் விரிவாக்க மைய வளாகத்தில் 500 பனை விதைகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் சட்டப்பேரவை உறுப்பினா் ஜீ.வி.மாா்க்கண்டேயன், பனை விதைப்பந்துகளை நடவு செய்து தொடங்கி வைத்தாா். இதில், விடியல் அறக்கட்டளை நிா்வாகி ஜோதிமணி, கிழக்கு ஒன்றிய திமுக செயலா் சின்னமாரிமுத்து, பேரூா் செயலா் வேலுச்சாமி, பயிா் உற்பத்தியாளா் சங்க மேலாளா் செந்தில்குமாா் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யோகம் யாருக்கு?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தல்: வாக்குப் பதிவு தொடங்கியது!

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

SCROLL FOR NEXT