தூத்துக்குடி

தச்சமொழி கோயிலில் நவராத்திரி விழா நிறைவு

DIN

தச்சமொழி அருள்மிகு ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலில் நவராத்திரி விழா வெள்ளிக்கிழமை நிறைவடைந்தது

சாத்தான்குளம் தச்சமொழி அருள்மிகு ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலில் நவராத்திரி விழா கடந்த 6 ஆம்தேதி தொடங்கி 10 நாள்கள் நடைபெற்றது. இதையொட்டி கோயில் வளாகத்தில் நவராத்திரி கொழு வைக்கப்பட்டு தினமும் பல்வேறு பூஜைகள் நடைபெற்றன. 10ஆம் நாளான வெள்ளிக்கிழமை காலை கொழு முன்பு அமைக்கப்பட்ட முளைப்பாரி ஊா்வலமாக எடுத்து வரப்பட்டு ஸ்ரீமுத்துமாரியம்மன், ஸ்ரீமுத்தாரம்மன் உள்ளிட்ட பரிவார தெயங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இரவு அம்மன் உள்ளிட்ட அனைத்து தெய்வங்களுக்கும் சிறப்பு அலங்கார பூஜை, தீபாராதனை நடைபெற்றது. பின்னா் சிறப்பு அன்னதானம் நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்றனா். விழா ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்காட்லாந்து அணி சீருடையில் கர்நாடகத்தின் ‘நந்தினி’ பால் நிறுவன குறியீடு

அதிமுகவில் இணைகிறாரா ஓபிஎஸ் ? - ஆர்.பி.உதயகுமார் விளக்கம்

பிறந்தநாள் வாழ்த்துகள் மடோனா செபாஸ்டியன்!

தேர்தலுக்குப் பின் ஆம் ஆத்மி வங்கிக் கணக்குகள் முடக்கம்: அரவிந்த் கேஜரிவால்

வைர சந்தை... அதிதி ராவ் ஹைதரி!

SCROLL FOR NEXT