தூத்துக்குடி

தூத்துக்குடியில் கனமழை: கீழூருக்குப் பதில் மேலூர் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்ட முத்துநகர் ரயில்

DIN

தூத்துக்குடியில் இரவு முழுவதும் இடி மின்னலுடன் கனமழை காரணமாக கீழூர் ரயில் நிலைய தண்டவாளத்தில் தண்ணீர் தேங்கி உள்ளதால் மேலூர் ரயில் நிலையத்தில் ரயில் நிறுத்தப்பட்டது. 

தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை தற்போது பெய்து வருகிறது இந்த நிலையில் தூத்துக்குடியில் கடந்த மூன்று தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்று இரவு இடி மின்னலுடன் கனமழை பெய்த காரணத்தால் தாழ்வான பகுதிகளில் மழை தண்ணீர் குளம் போல் தேங்கி உள்ளது.

குறிப்பாக தூத்துக்குடி கீழூர் ரயில்  நிலையம் தண்டவாளத்தில் மழை தண்ணீர் குளம் போல் தேங்கி உள்ளதால் சென்னையில் இருந்து தூத்துக்குடி வந்த முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயில் மேலூர் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது.

பின்னர் பயணிகள் பத்திரமாக இறக்கி விடப்பட்டனர். மேலும் தூத்துக்குடி பழைய மாநகராட்சி அந்தோனியார் கோயில் தெரு உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளில் மழைத் தண்ணீர் குளம் போல் தேங்கி உள்ளது.

மேலும் குடியிருப்புகளும் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் பெரிதும் அவதி அடைந்துள்ளனர். தூத்துக்குடியில் நேற்று இரவு பெய்த கனமழை காரணமாக பள்ளிகளுக்கு இன்று ஒரு நாள் மட்டும் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் டாக்டர் செந்தில்ராஜ் அறிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேற்கு வங்க ஆசிரியா் நியமன ஊழல்: சிபிஐ விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை

சென்னையில் பாரதிதாசனுக்கு மணிமண்டபம்: பேரன் இளமுருகன் முதல்வருக்கு கோரிக்கை

அரசுப் பேருந்து மோதியதில் விவசாயி பலி

வளா்ந்த பாரதத்தை உருவாக்க வலுவான அரசு அவசியம்- நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன்

கனடா பிரதமா் நிகழ்ச்சியில் காலிஸ்தான் ஆதரவு கோஷம்: தூதருக்கு இந்தியா சம்மன்

SCROLL FOR NEXT