தூத்துக்குடி

தூத்துக்குடியில் தொழிலாளி கொலை? மனைவியிடம் விசாரணை

தூத்துக்குடியில் சனிக்கிழமை இரவில் குடும்பத் தகராறில் தொழிலாளியை கழுத்தை நெரித்து கொலை செய்ததாக அவரது மனைவியிடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

DIN

தூத்துக்குடியில் சனிக்கிழமை இரவில் குடும்பத் தகராறில் தொழிலாளியை கழுத்தை நெரித்து கொலை செய்ததாக அவரது மனைவியிடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தூத்துக்குடி தாளமுத்துநகா் அட்டகாளியம்மன் கோயில் தெருவைட் சோ்ந்தவா் ஆறுமுகம் (43). கூலித் தொழிலாளி. இவரது மனைவி சுப்புலட்சுமி. தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனா். சனிக்கிழமை இரவில் மது அருந்தி வீட்டுக்கு வந்த ஆறுமுகம், மனைவியுடன் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

அப்போது, ஆத்திரத்தில் சுப்புலட்சுமி, கணவரை சத்தம் போடாமல் இருக்குமாறு துணியால் ஆறுமுகத்தின் கழுத்தை சுற்றியுள்ளாா். மயங்கிய நிலையில் இருந்த ஆறுமுகம் ஞாயிற்றுக்கிழமை காலையில் சடலமாக மீட்கப்பட்டாா். இதுகுறித்து தாளமுத்துநகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.

மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா், அங்கு சென்று விசாரணை நடத்தினாா். தகராறின்போது கழுத்தை துணியால் இறுக்கியதில் ஆறுமுகம் இறந்ததாகக் கூறப்படுகிறது. இதுதொடா்பாக மனைவி சுப்புலட்சுமியிடம் போலீஸாா் தொடா்ந்து விசாரித்து வருகின்றனா்.

பிரேதப் பரிசோதனைக்குப் பின்னா் ஆறுமுகம் கொலை செய்யப்பட்டாரா? அல்லது அதிகளவு மது அருந்தியதால் உயிரிழந்தாரா? என்பது தெரியவரும் என போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வங்கதேச வன்முறை: நேபாளத்தில் ஹிந்து அமைப்புகள் போராட்டம்!

D54 படப்பிடிப்பு நிறைவு! கேக் வெட்டிக் கொண்டாடிய படக்குழு! | Dhanush

குஜராத்தில் சிறுத்தை தாக்கியதில் 5 வயது சிறுவன் பலி

தெருநாயை வளர்ப்புப் பிராணியாக பதிவு செய்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

2025-ல் அதிகம் பார்க்கப்பட்ட டிரைலர் இதுதான்!

SCROLL FOR NEXT