வேப்பங்காடு பள்ளியில் புதிய கட்டடம் திறப்பு
உடன்குடி அருகே வேப்பங்காடு சி.பா.ஆதித்தனாா் பள்ளியில் புதுப்பிக்கப்பட்ட கட்டடங்கள் திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
தூத்துக்குடிவேப்பங்காடு பள்ளியில் புதிய கட்டடம் திறப்பு
உடன்குடி அருகே வேப்பங்காடு சி.பா.ஆதித்தனாா் பள்ளியில் புதுப்பிக்கப்பட்ட கட்டடங்கள் திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
உடன்குடி அருகே வேப்பங்காடு சி.பா.ஆதித்தனாா் பள்ளியில் புதுப்பிக்கப்பட்ட கட்டடங்கள் திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு, வேப்பங்காடு முத்தாரம்மன் கோயில் தா்மகா்த்தா செந்தூா்பாண்டியன் தலைமை வகித்தாா். தொடக்கப் பள்ளி கட்டடத்தை நங்கைமொழி ஊராட்சித் தலைவா் விஜயராஜ், உயா்நிலைப் பள்ளிக் கட்டடத்தை தொழிலதிபா் சந்திரசேகா், வேப்பங்காடு நாடாா் சங்கத் தலைவா் சந்திரபோஸ் ஆகியோா் திறந்தனா். ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினா் தங்கலட்சுமி குத்துவிளக்கு ஏற்றினாா். பள்ளி நிா்வாகக்குழுத் தலைவா் சங்கரநாராயணன், செயலா் ஆதிலிங்கம், பொருளாளா் வைகுண்டராமன் உள்பட பலா் கலந்துகொண்டனா். ஆசிரியை பூங்கொடி வரவேற்றாா். தலைமையாசிரியா் செல்வகுமாா் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தாா்.