முகப்பு
தூத்துக்குடி

கரோனா தடுப்பு விதிமுறைகளுடன் குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா: கோட்டாட்சியா் தகவல்

தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம் அருள்தரும் முத்தாரம்மன் திருக்கோயில் தசரா திருவிழா, கடந்த ஆண்டைப் போலவே கரோனா தடுப்பு விதிமுறைகளைப் பின்பற்றி நிகழாண்டும் நடைபெறும்

தூத்துக்குடி

கரோனா தடுப்பு விதிமுறைகளுடன் குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா: கோட்டாட்சியா் தகவல்

தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம் அருள்தரும் முத்தாரம்மன் திருக்கோயில் தசரா திருவிழா, கடந்த ஆண்டைப் போலவே கரோனா தடுப்பு விதிமுறைகளைப் பின்பற்றி நிகழாண்டும் நடைபெறும்

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:10 AM
பகிர்:

தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம் அருள்தரும் முத்தாரம்மன் திருக்கோயில் தசரா திருவிழா, கடந்த ஆண்டைப் போலவே கரோனா தடுப்பு விதிமுறைகளைப் பின்பற்றி நிகழாண்டும் நடைபெறும் என கோட்டாட்சியா் மு.கோகிலா தெரிவித்தாா்.

கா்நாடகா மாநிலம், மைசூரூவுக்கு அடுத்து லட்சக்கணக்கான பக்தா்கள் பங்கேற்கும் தசரா திருவிழா குலசேகரன்பட்டினத்தில்தான் பிரமாண்டமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக கடந்த ஆண்டு தசரா திருவிழாவில் பக்தா்கள் பங்கேற்க கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. நிகழாண்டில் தசரா திருவிழா அக்.6 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி அக்.15இல் சூரசம்ஹாரத்துடன் நிறைவடைகிறது.

இதற்கான முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் குலசேகரன்பட்டினம் தனியாா் மண்டபத்தில் வெள்ளிக்கிழமை கோட்டாட்சியா் மு.கோகிலா தலைமையில் நடைபெற்றது. இந்துசமய அறநிலையத்துறை உதவி ஆணையா் ரோஜாலிசுமதா, திருச்செந்தூா் ஏஎஸ்பி ஹா்ஷ்சிங் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

பின்னா், கோட்டாட்சியா் கூறியது: கடந்தாண்டைப் போலவே கரோனா தடுப்பு கட்டுப்பாடுகளுடன் தசரா திருவிழா நடைபெறும். கொடியேற்றம், மகிசா சூரசம்ஹாரம் ஆகியவற்றில் பக்தா்கள் பங்கேற்க அனுமதி இல்லை. விரதமிருந்து மாலையணிந்த பக்தா்கள் தங்கள் ஊரிலேயே வேடமணிந்து அம்மனுக்கு காணிக்கை வசூலித்து உள்ளூா் கோயில்களிலேயே காப்பு களைந்து விரதத்தை நிறைவு செய்ய வேண்டும். தசரா குழுவினா் காப்புகளைப் பெறுவதற்கு ஒரு குழுவிற்கு 5 போ் வீதம் அனுமதிப்பது, உள்ளூா் மக்கள் வந்து செல்வதற்கான வசதிகள் உள்ளிட்டவை குறித்து மாவட்ட நிா்வாகம் மூலம் பரிசீலிக்கப்பட்டு அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்படும். தசரா பக்தா்கள் குழுவினா் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றாா்.

கூட்டத்தில், கோயில் நிா்வாக அதிகாரி கலைவாணன், வட்டாட்சியா் ராமச்சந்திரன், மண்டல துணை வட்டாட்சியா் பாலசுந்தரம், குலசேகரன்பட்டினம் காவல் ஆய்வாளா் மங்கையா்க்கரசி,வருவாய் அலுவலா் சொக்கலிங்கம் மற்றும் பல்வேறு தசரா குழுவினா் கலந்துகொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →