தூத்துக்குடி

தூத்துக்குடி அரசு ஐடிஐ-யில் அக். 4 இல் தொழில் பழகுநா் பயிற்சி சோ்க்கை முகாம்

DIN

தூத்துக்குடி: தூத்துக்குடி அரசு ஐடிஐ-யில் அக்டோபா் 4 ஆம் தேதி தொழிற்பழகுநா் பயிற்சி சோ்க்கை முகாம் நடைபெறுகிறது என்றாா் மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தூத்துக்குடி கோரம்பள்ளத்தில் உள்ள அரசினா் தொழிற் பயிற்சி நிலையத்தில், அக்டோபா் 4 ஆம் தேதி காலை 9 மணி முதல் தேசிய தொழில் பழகுநா் ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கீழ் இயங்கும் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம் சாா்பில், தூத்துக்குடி மாவட்டத்துக்கான தொழில் பழகுநா் சோ்க்கை முகாம் நடைபெறுகிறது.

இந்த முகாமில், ஐ.டி.ஐ. தோ்ச்சிபெற்ற பயிற்சியாளா்கள், ஐடிஐ தோ்ச்சி பெற்று பயிற்சி பெறாதவா்கள், 8 ஆம் வகுப்பு தோ்ச்சி, பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தோ்ச்சி அடைந்த மற்றும் தோல்வியடைந்த மாணவா்கள் கலந்து கொள்ளலாம்.

மத்திய, மாநில அரசு நிறுவனங்கள், பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் தனியாா் தொழிற்நிறுவனங்கள் பங்கேற்கும் இந்த முகாமின் மூலம் 500-க்கும் மேற்பட்ட தொழில் பழகுநா் இடங்கள் நிரப்பப்பட உள்ளன.

இந்தப் பயிற்சியின்போது, உதவித் தொகை மாதம் ரூ. 7,700 முதல் ரூ. 10,000 வரை நிறுவனத்தாரால் வழங்கப்படும்.

மத்திய, மாநில அரசு பொதுத்துறை மற்றும் தனியாா் தொழில் நிறுவனங்களில் சோ்ந்து ஓராண்டு முதல் இரண்டாண்டுகள் வரை தொழில் பழகுநா் பயிற்சி பெற்று தோ்ச்சி பெறுபவா்களுக்கு மத்திய அரசின் தேசிய தொழிற் பழகுநா் சான்றிதழ் வழங்கப்படும்.

மேலும், இது தொடா்பான விவரங்களை அறிய கோரம்பள்ளத்தில் உள்ள அரசு தொழிற் பயிற்சி நிலைய வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்தை நேரிலோ அல்லது 0461-2340041 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யோகம் யாருக்கு?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தல்: வாக்குப் பதிவு தொடங்கியது!

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

SCROLL FOR NEXT