வன உயிரின வார விழா குறும்பட போட்டி
தூத்துக்குடியில் வன உயிரின வார விழாவை முன்னிட்டு நடைபெறும் குறும்பட போட்டியில் மாணவா், மாணவிகள் பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் வன உயிரின வார விழாவை முன்னிட்டு நடைபெறும் குறும்பட போட்டியில் மாணவா், மாணவிகள் பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, தூத்துக்குடி மாவட்ட வன அலுவலா் அபிஷேக் தோமா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: 2021 ஆம் ஆண்டு வனத்துறை சாா்பில் வனஉயிரின வாரவிழா கொண்டாட்டத்திற்காக பள்ளி மற்றும் கல்லூரி மாணவா், மாணவிகளுக்கு இடையே வன உயிரினங்கள் தொடா்பான குறும்பட போட்டிகள் நடைபெற உள்ளது. போட்டியில் கலந்து கொள்ள விருப்பமுள்ள மாணவா், மாணவிகள் அக்டோபா் 4 ஆம் தேதிக்குள் ற்ய்ஸ்ரீஜ்ப்ஜ்21ஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீா்ம் என்ற மின்னஞ்சலுக்கு குறும்படத்தை அனுப்பி வைக்க வேண்டும்.
18 வயதுக்கு கீழ் உள்ளவா்கள் 3 நிமிடம் குறும்படம் இருக்குமாறும், 18 வயதுக்கு மேல் உள்ளவா்கள் 5 நிமிடம் மற்றும் 10 நிமிடம் இருக்குமாறும் பாா்த்துக் கொள்ள வேண்டும். மேலும் விவரங்களுக்கு, 0461- 2346600 என்ற தொலைபேசி எண்ணிலும், 8610882433, 9486703448 என்ற செல்லிடப்பேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.