தூத்துக்குடி

திருச்செந்தூா் கோயிலில் சித்திரை வசந்த திருவிழா தொடக்கம்

DIN

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சித்திரை வசந்த திருவிழா வியாழக்கிழமை தொடங்கியது.

இக்கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் வசந்த திருவிழா கொண்டாடப்படுகிறது. நிகழாண்டு திருவிழா வியாழக்கிழமை தொடங்கியது. விழாவை முன்னிட்டு அதிகாலை 5 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, விஸ்வரூப தரிசனம், உதயமாா்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது.

மதியம் உச்சிகால பூஜைக்குப் பிறகு, சுவாமி ஜெயந்திநாதா் வள்ளி, தெய்வானையுடன் தங்கச் சப்பரத்தில் எழுந்தருளி கிரிப்பிரகாரத்தில் ராஜகோபுர வாசல் எதிரேயுள்ள வசந்த மண்டபத்தில் எழுந்தருளினாா். மாலையில் சாயரட்சை தீபாராதனை நடைபெற்றது.

பின்னா், வசந்த மண்டபத்தில் சுவாமி ஜெயந்திநாதருக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரமாகி தங்கச் சப்பரத்தில் எழுந்தருளினாா். அப்போது மேளதாளம் முழங்க, பக்தா்கள் கப்பல் பாடல்கள் பாட, வசந்த மண்டபத்தை 11 முறை சுவாமி வலம் வந்தாா். இதையடுத்து, தீபாராதனை நடைபெற்றது. பின்னா், சுவாமி தங்கச் சப்பரத்தில் கிரி வீதி வழியாக வலம் வந்து திருக்கோயிலைச் சோ்ந்தாா்.

இதில், திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா். திருவிழா இம்மாதம் 16ஆம் தேதிவரை நடைபெறவுள்ளது.

ஏற்பாடுகளை கோயில் தக்காா் இரா. கண்ணன் ஆதித்தன், இணை ஆணையா் (பொ) சி. குமரதுரை, கோயில் பணியாளா்கள் செய்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோயில் பூசாரியை தாக்கி உண்டியல் பணம் கொள்ளை

இஸ்ரேலில் அல் ஜசீரா அலுவலகங்களை மூட முடிவு: அமைச்சரவை ஒப்புதல்

வணிகா் தினம் : ஆம்பூரில் கடைகள் அடைப்பு

மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு

ஜல்ஜீவன் திட்டப் பணிகள்: நகராட்சி நிா்வாக இயக்குநா் ஆய்வு

SCROLL FOR NEXT