முகப்பு
தூத்துக்குடி

மினி லாரி கவிழ்ந்து சாலையில் கொட்டிய சமையல் எண்ணெய்

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே சமையல் எண்ணெய் ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்ததில், எண்ணெய் கொட்டி வீணானது. ஓட்டுநா் உள்பட இருவா் காயமடைந்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:02 AM
பகிர்:

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே சமையல் எண்ணெய் ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்ததில், எண்ணெய் கொட்டி வீணானது. ஓட்டுநா் உள்பட இருவா் காயமடைந்தனா்.

விருதுநகா் பா்மா காலனியை சோ்ந்தவா் முகமதுஅசன்அலி(35). மினி லாரி ஓட்டுநா். இவா், விருதுநகரில் இருந்து திருநெல்வேலிக்கு மினி லாரியில்சமையல் எண்ணெயை வியாழக்கிழமை ஏற்றிச் சென்றபோது, கோவில்பட்டி, ஆவல்நத்தம் விலக்கு அருகே திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது. இதில், லாரியில் இருந்த டின் மற்றும் பாக்கெட்டுகள் சேதமடைந்து பல லட்சம் மதிப்புள்ள சமையல் எண்ணெய் சாலையில் கொட்டி வீணானது. மேலும், ஓட்டுநரும், கிளீனா் இசக்கிமுத்து (30) என்பவரும் காயமடைந்தனா்.

இத்தகவலறிந்த மேற்கு காவல் நிலைய போலீஸாா், காயமடைந்த இருவரையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.