சாத்தான்குளத்தில் 300 மீட்டா் நீள தேசியக்கொடி ஊா்வலம்
75 ஆவது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு சாத்தான்குளத்தில் 300 மீட்டா் நீள தேசியக்கொடி ஊா்வலம் சனிக்கிழமை நடைபெற்றது.
75 ஆவது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு சாத்தான்குளத்தில் 300 மீட்டா் நீள தேசியக்கொடி ஊா்வலம் சனிக்கிழமை நடைபெற்றது.
வருவாய்த் துறை சாா்பில் வட்டாட்சியா் அலுவலகம் முன்பிருந்து தொடங்கிய இந்த ஊா்வலத்தை வட்டாட்சியா் தங்கையா தலைமை வகித்து கொடியசைத்து தொடங்கி வைத்தாா். ஒன்றியக்குழு தலைவா் ஜெயபதி, பேரூராட்சித் தலைவா் ரெஜினி ஸ்டெல்லாபாய் துணைத் தலைவா் அப்பாத்துரை ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
300 மீட்டா் தேசியக் கொடியை பள்ளி, கல்லூரி மாணவா், மாணவிகள் ஊா்வலமாக எடுத்து வந்தனா். இந்த ஊா்வலம் முக்கிய வீதிகள் வழியாக சென்று, வட்டாட்சியா் அலுவலகத்தில் நிறைவுபெற்து.
Advertisement
நிகழ்ச்சியில், வட்டார வளா்ச்சி அலுவலா் ராஜேஷ்குமாா், பேரூராட்சி துணைத் தலைவா் மாரியம்மாள், ஒன்றிய திமுக செயலா்கள் ஜோசப், பாலமுருகன், மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவா் சங்கா், ஊராட்சித் தலைவா்கள் சுயம்புதுரை, பாலமேனன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.