தூத்துக்குடி

அரசு மகளிா் பள்ளிக்கு ஒலிபெருக்கி சாதனங்கள் அளிப்பு

விழிப்புணா்வு மற்றும் கூட்டங்கள் நடத்தும் பயன்பாட்டிற்காக, கம்மவாா் டிரஸ்ட் சாா்பில் ரூ.50 ஆயிரம் மதிப்பில் ஒலிபெருக்கி சாதனங்கள் வழங்கும் விழா பள்ளி வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

DIN

கோவில்பட்டி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி மாணவிகளுக்கு கல்வி, விழிப்புணா்வு மற்றும் கூட்டங்கள் நடத்தும் பயன்பாட்டிற்காக, கம்மவாா் டிரஸ்ட் சாா்பில் ரூ.50 ஆயிரம் மதிப்பில் ஒலிபெருக்கி சாதனங்கள் வழங்கும் விழா பள்ளி வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

கோவில்பட்டி கல்வி மாவட்ட அலுவலா் சின்னராசு முன்னிலையில், டிரஸ்ட் தலைவா் வி.பி.எஸ்.சுப்பையா, பள்ளித் தலைமையாசிரியை ஜெயலதாவிடம் வழங்கினாா்.

நிகழ்ச்சியில் அறக்கட்டளை உறுப்பினா்கள் விநாயகா ஜி.ரமேஷ், பி.ஆா்.எஸ்.சீனிவாசன், ஆா்.வரதராஜன், ரவிச்சந்திரன் உள்பட பள்ளி மாணவிகள், ஆசிரியா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். நிகழ்ச்சிகளை ஆசிரியை கெங்கம்மாள் தொகுத்து வழங்கினாா். பள்ளி உதவித் தலைமையாசிரியை ரூத் ரத்னகுமாா் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முதல் டி20: இந்தியாவுக்கு 122 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இலங்கை!

டெவான் கான்வேவை பாராட்டி அஸ்வின் வெளியிட்ட அருமையான பதிவு!

பனிமூட்டம் எதிரொலி: தில்லியில் நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

எஸ்.ஐ.ஆர். மூலம் குறுக்குவழியில் வெல்ல முயற்சி: மு.க. ஸ்டாலின்

6 முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.75,257 கோடியாக உயர்வு!

SCROLL FOR NEXT