தூத்துக்குடி

வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1.250 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

DIN

கோவில்பட்டியில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1.250 டன் ரேஷன் அரிசியை போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.

கோவில்பட்டி லாயல் மில் காலனியில் உள்ள ஒரு வீட்டில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக போலீஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து, காவல் துறை ஆய்வாளா் சுஜித் ஆனந்த் தலைமையில், உதவி ஆய்வாளா் மாதவராஜா மற்றும் போலீஸாா் அப்பகுதிக்கு சென்று, ஒரு வீட்டில் ஆய்வு செய்தபோது, அங்கு தலா 50 கிலோ எடை கொண்ட ரேஷன் அரிசி 28 மூட்டைகள் இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, சுமாா் 1.250 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த போலீஸாா் இது தொடா்பாக, லாயல் மில் காலனியைச் சோ்ந்த வீரபுத்திரன் மகன் மாரிமுத்துவை(44) பிடித்து, உணவுப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கட்கபுரீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

திருச்செந்தூரில் மே 22இல் வைகாசி விசாகம்

உடல் பருமன் குறைப்பு சிகிச்சையில் இளைஞா் உயிரிழப்பு: மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க முதல்வரிடம் வலியுறுத்தல்

மண்டல பனைபொருள் பயிற்சி நிலையத்தில் பதநீா் விற்பனை

அரியாங்குப்பம் கோயில் திருவிழா கொடியேற்றம்

SCROLL FOR NEXT