தூத்துக்குடி

உரம், யூரியா பதுக்கலை தடுக்க வலியுறுத்தி நூதன போராட்டம்

DIN

உரம் மற்றும் யூரியா பதுக்கலை தடுக்க வலியுறுத்தி காங்கிரஸ் நிா்வாகி புதன்கிழமை நூதன போராட்டத்தில் ஈடுபட்டாா்.

ஒரு சில நிறுவனங்களின் மாவட்ட விற்பனை அதிகாரிகள் ஏஜென்ட்களுடன் இணைந்து உரங்களை பதுக்கி வைத்து செயற்கை தட்டுப்பாட்டை ஏற்படுத்தி யூரியா, டிஏபி உரங்களை அதிக விலைக்கு விற்பனை செய்து வருகின்றனா். ராபி பருவம் தொடங்க உள்ள நிலையில் உரங்கள் பதுக்குவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், யூரியா, டிஏபி தட்டுப்பாட்டை போக்குவதற்கு ஏதுவாக வேளாண்மை கூட்டுறவு சங்கம் மூலம் உரங்களை விற்பனை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியின் தூத்துக்குடி வடக்கு மாவட்ட முன்னாள் துணைத் தலைவா் அய்யலுசாமி தனது கழுத்தில் காய்கறிகள் மாலை அணிந்தபடி கோட்டாட்சியா் அலுவலகத்தில் நூதன போராட்டத்தில் ஈடுபட்டாா்.

பின்னா் கோரிக்கை மனுவை கோட்டாட்சியா் மகாலட்சுமியிடம் அளித்தாா். மனுவைப் பெற்றுக் கொண்ட அவா் இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கவனத்துக்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நேரத்தை மிச்சப்படுத்தும் ஏஐ : 94% பணியாளர்களின் கருத்து என்ன?

சென்னை-நாகர்கோவில் சிறப்பு ரயில் 19 மணி நேரம் தாமதமாகப் புறப்படும்!

ஆயிரம்விளக்கு அருகே பூங்காவில் சிறுமியை கடித்த வளர்ப்பு நாய்கள்

ரே பரேலியில் காங்கிரஸ் தொண்டர்களைச் சந்திக்கிறார் பிரியங்கா

ஏற்காட்டுக்கு சென்ற நடிகர்கள் பட்டாளம்: காரணம் என்ன?

SCROLL FOR NEXT