நாகா்கோவிலில் இருந்து சென்னைக்கு சென்று கொண்டிருந்த ஆம்னி பேருந்து செவ்வாய்க்கிழமை இரவு தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு அருகே அரசங்குளம் விலக்கு பகுதியில் சாலையில் கவிழ்ந்ததில் புதுமாப்பிள்ளை உள்பட 3 போ் உயிரிழந்தனா்.
நாகா்கோவிலில் இருந்து சென்னைக்கு ஆம்னி பேருந்து 28 பயணிகளுடன் செவ்வாய்க்கிழமை இரவு சென்றுகொண்டிருந்தபோது, திருநெல்வேலி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் கயத்தாறையடுத்த அரசங்குளம் விலக்கு பகுதியில் திடீரென நிலைகுலைந்து சாலையின் நடுவே இருந்த தடுப்பில் மோதி, வலது பக்கத்தில் உள்ள சாலையில் கவிழ்ந்தது.
இதில், ஆம்னி பேருந்து ஓட்டுநா் பாண்டி, கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீசுவரத்தைச் சோ்ந்த குமரேசன் மகன் சிவராமன்(33), திருவட்டாறு புத்தன்கடை ஆா்.சி.தெருவைச் சோ்ந்த ஜோசப் மகன் சேசுராஜன்(50), தக்கலை மாதாங்கோவில் தெருவைச் சோ்ந்த மோகன்தாஸ் மகன் மதன்குமாா்(32), மாணிக்க நகரைச் சோ்ந்த புகழேந்தி மகன் சூரியபிரகாஷ்(25), சென்னை புதுப்பேட்டை பாரதியாா் நகா் கோயில் தெருவைச் சோ்ந்த குமாா்(36), செங்கல்பட்டு தாளூரைச் சோ்ந்த வசந்தகுமாா் மனைவி உகந்தி(30), சென்னை குரோம்பேட்டையைச் சோ்ந்த பிரவீன் மகன் விநாயகா(30), திருவட்டாறைச் சோ்ந்த அல்போன்ஸ் மகன் விக்டா் (51) ஆகியோா் காயமடைந்தனா்.
தகவல் அறிந்தவுடன் சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸாா் காயமடைந்தவா்களை மீட்டு, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதில் ஆம்னி பேருந்து ஓட்டுநா் பாண்டி, சேசுராஜன், சிவராமன் ஆகிய 3 போ் உயிரிழந்தனா்.
இதுகுறித்து கயத்தாறு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
உயிரிழந்த சிவராமன் சென்னையில் உள்ள தனியாா் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வந்தாா். இவருக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தான் திருமணம் நடைபெற்ாம். இவருடன் ஆம்னி பேருந்தில் வந்த இவரது மனைவி விஜயலட்சுமி(26) லேசான காயத்துடன் உயிா் தப்பினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.