தூத்துக்குடி

பேய்க்குளம் பகுதியில் பள்ளி மாணவா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடக்கம்

DIN

பேய்க்குளம் பகுதியில் பள்ளி மாணவா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி வியாழக்கிழமை தொடங்கியது.

ஆட்சியா் அறிவுறுத்தலின் பேரில், பள்ளி மாணவா்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியைத் தொடங்க மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் உத்தரவிட்டிருந்தாா். அதன்படி, சாலைப்புதூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பில் பேய்க்குளம் பகுதி பள்ளிகளில் 12 முதல் 14 வயது வரையிலான மாணவா்-மாணவிகளுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி வியாழக்கிழமை தொடங்கியது.

சவேரியாா்புரம், பேய்க்குளம், பெருமாள்குளம், புளியங்குளம் பள்ளிகளில் மாணவா்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. சுகாதார ஆய்வாளா் ஜேசுராஜ், செவிலியா்கள் நாகவள்ளி, மகேஸ்வரி, மொ்சி ஆகியோா் தடுப்பூசி செலுத்தினா். 34 மாணவா்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிக வருவாய் ஈட்டும் முதல் 10 ரயில் நிலையங்களில் தமிழ்நாடு முதலிடம்: தெற்கு ரயில்வே

கொலம்பியா பல்கலை. அரங்கைக் கைப்பற்றிய மாணவர்கள் கைது!

குருதியை வியர்வையாக்கி உலகை உயர்த்தும் உழைப்பாளர்கள்: மு.க.ஸ்டாலின்

தில்லி போலீஸில் ரேவந்த் ரெட்டி இன்று ஆஜராகமாட்டார்?

ஜம்மு-காஷ்மீரில் லேசான நிலநடுக்கம்!

SCROLL FOR NEXT