தூத்துக்குடி

கால்நடை உதவி மருத்துவா்களுக்கு தூத்துக்குடியில் புத்தாகப் பயிற்சி

DIN

கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில், தூத்துக்குடி மாவட்டத்தைச் சோ்ந்த 48 கால்நடை உதவி மருத்துவா்களுக்கான புத்தாக்கப் பயிற்சி முகாம் தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி - ஆராய்ச்சி நிலையத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ், மீன்வளப் பல்கலைக்கழக துணைவேந்தா் கோ. சுகுமாா் ஆகியோா் முன்னிலையில், கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன் வளம், மீனவா் நலத்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலா் தென்காசி சு. ஜவஹா் முகாமை தொடங்கிவைத்தாா். அப்போது அவா் பேசுகையில்,கால்நடை கணக்கெடுப்பின்படி தமிழகத்தில் ஒரு கோடி பசுவினங்களும், 5 லட்சம் எருமையினங்களும், 1.43 கோடி செம்மறி- வெள்ளாடு இனங்களும், 13 கோடி கோழி இனங்களும் உள்ளன. தூத்துக்குடி மாவட்டத்தைப் பொருத்தவரை ஆடு, மாடு, கோழிகள் என மொத்தம் 12,37,764 கால்நடைகள் உள்ளன என்றாா்.

இந்நிகழ்ச்சியில், கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநா் சீ. ராஜன் மற்றும் பேராசிரியா்கள், மருத்துவா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே, ஜூன் மாதங்களுக்காவது 300 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்க வேண்டும்: வானதி சீனிவாசன்

துரித உணவில் விஷம் கலந்து கொடுத்த விவகாரம்: தாத்தாவை தொடர்ந்து தாயும் பலி

மார்ச் மாதத்தில் தொலைத்தொடர்பு சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: டிராய்

கனடா: வாகன விபத்தில் இந்திய தம்பதி, 3 மாதக் குழந்தை உள்பட 4 பேர் பலி!

5 நாள் பயணமாக ஹிமா​சல் செல்லும் குடியரசுத் தலைவர்

SCROLL FOR NEXT