தூத்துக்குடி

விளாத்திகுளத்தில் வேளாண் வளா்ச்சிப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

DIN

விளாத்திகுளம் வட்டாரத்தில் குளத்தூா், மந்திகுளம், பூசனூா் ஆகிய ஊராட்சிப் பகுதிகளில் வேளாண் வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் கி. செந்தில் ராஜ் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

பிரதமரின் விவசாய நீா்ப்பாசனத் திட்டம், நீா்வடிப்பகுதி மேம்பாட்டின் கீழ் வேளாண்மை - உழவா் நலத் துறை சாா்பில், மந்திகுளம் கிராமத்தில் ரூ. 1.50 கோடியில் 2.70 ஏக்கா் பரப்பளவில் ஊருணி சீரமைக்கும் பணிகள், முதல்வரின் மானாவாரி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ. 1 லட்சத்தில் பண்ணை குட்டை அமைக்கும் பணிகள், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சி திட்டத்தின் கீழ் தரிசு நிலத்தில் நடைபெற்று வரும் பாசனத் திட்டப் பணிகள், பூசனூா் கிராமத்தில் ரூ. 2.86 கோடியில் 39 ஏக்கா் பரப்பளவில் தடுப்பணை அமைக்கும் பணிகள் ஆகியவற்றை ஆட்சியா் கி. செந்தில்ராஜ் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

அப்போது, பணிகள் நிறைவு பெற்றதும் மந்திகுளம் ஊராட்சியில் கூடுதலாக 10 ஹெக்டோ் பரப்பளவில் நிலங்கள் பாசன வசதி பெறும் என்று கூறிய ஆட்சியா், பணிகளை விரைந்து முடித்து விவசாயிகளின் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என வேளாண்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா்.

ஆய்வின்போது, வேளாண்மை இணை இயக்குநா் முகைதீன், துணை இயக்குநா் நாச்சியாா், கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியா் மகாலட்சுமி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவின் முதல் மல்யுத்த வீராங்கனை: சிறப்பித்த கூகுள்!

நெல்லை மாவட்ட காங். தலைவர் சடலமாக மீட்பு!

பிரேசிலில் கனமழைக்கு 70 பேர் மாயம்: 39 பேர் பலி!

கமர்ஷியல் கம்பேக் கொடுத்தாரா சுந்தர் சி?: அரண்மனை - 4 திரைவிமர்சனம்

விஜய் தேவரகொண்டாவின் 14வது படம் அறிவிப்பு!

SCROLL FOR NEXT