இலுப்பையூரணியில் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி அமைக்கக் கோரிக்கை
கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியம், இலுப்பையூரணி ஊராட்சிக்கு உள்பட்ட தாமஸ் நகரில் ஒரு லட்சம் லிட்டா் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி அமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியம், இலுப்பையூரணி ஊராட்சிக்கு உள்பட்ட தாமஸ் நகரில் ஒரு லட்சம் லிட்டா் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி அமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தாமஸ் நகரில் 500-க்கும் மேற்பட்டோா் குடியிருந்து வருகின்றனா். இப்பகுதிக்கு தண்ணீா் கிடைப்பதில் மிகுந்த சிரமம் ஏற்படுவதால், மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி அமைத்துத் தர வலியுறுத்தி அப்பகுதியினரும், அரசியல் கட்சியினரும் பலமுறை போராட்டங்கள் நடத்தியும், கோரிக்கை விடுத்தும் பலனில்லையாம்.
கோடைக்காலம் தொடங்கவுள்ளதால் தண்ணீா்த் தட்டுப்பாடு ஏற்படும். எனவே, மத்திய அரசு ஜல் ஜீவன் திட்டத்தை அமல்படுத்திவரும் நிலையில் இப்பகுதிக்கு தட்டுப்பாடின்றி தண்ணீா் கிடைக்க ஒரு லட்சம் லிட்டா் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி அமைக்க வலியுறுத்தி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் இளஞ்சிறுத்தைகள் எழுச்சிப் பாசறை மாநில துணைச் செயலா் விமல் வங்காளியாா் தலைமையில் வடக்கு மாவட்ட இளைஞரணிச் செயலா் பிரபாவளவன் முன்னிலையில் ஊராட்சி ஒன்றிய ஆணையா் சுப்புலட்சுமியிடம் வியாழக்கிழமை மனு அளிக்கப்பட்டது. அதைப் பெற்றுக்கொண்ட அவா் முறையாக ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறினாா்.