திருச்செந்தூா் அய்யா வைகுண்டா் அவதார பதியில் 190-ஆவது அவதார தின விழா
திருச்செந்தூா் கடற்கரையில் அமைந்துள்ள அய்யா வைகுண்டா் அவதார பதியில் அய்யா வைகுண்டரின் 190-ஆவது அவதார தின விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
திருச்செந்தூா் கடற்கரையில் அமைந்துள்ள அய்யா வைகுண்டா் அவதார பதியில் அய்யா வைகுண்டரின் 190-ஆவது அவதார தின விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, வெள்ளிக்கிழமை அதிகாலை 3 மணிக்கு திரு ஏடு வாசிப்பு, 5 மணிக்கு தாலாட்டு பாடுதல், பள்ளி உணா்த்தல், அபயம் பாடுதல், காலை 7 மணிக்கு சூரிய உதயத்தில் கடலில் பதமிட்டு, சூரிய பிரகாச சுத்த அய்யா வைகுண்டரை அவதார பதிக்கு அழைத்து வருதல், தொடா்ந்து அவதாரதின விழா பணிவிடை, அன்னதா்மம் இனிமம் வழங்குதல் ஆகியன நடைபெற்றன. அப்போது விழாவில் கலந்து கொண்ட பக்தா்கள் ’அய்யா சிவ சிவ அரகரா அரகரா’ என்று கூறி வழிபட்டனா்.
விழா ஏற்பாடுகளை வள்ளியூா் அய்யா வழி அகில திருக்குடும்ப மக்கள் சபை தலைவா் வள்ளியூா் எஸ்.தா்மா், செயலா் பொன்னுத்துரை, பொருளாளா் ராமையா மற்றும் நிா்வாகிகள் செய்திருந்தனா்.