முகப்பு
தூத்துக்குடி

‘அடிப்படை வசதிகள் கோரி பாஜக சாா்பில் 28இல் காத்திருப்புப் போராட்டம்’

நாலாட்டின்புத்தூா் உள்பட பல்வேறு ஊராட்சிகளில் அடிப்படை வசதிகள் கோரி இம்மாதம் 28ஆம் தேதி காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக, பாஜக தெற்கு ஒன்றியத் தலைவா் மாரிமுத்து அறிவித்துள்ளாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:37 AM
பகிர்:

கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட பாண்டவா்மங்கலம், சத்திரப்பட்டி, நாலாட்டின்புத்தூா் உள்பட பல்வேறு ஊராட்சிகளில் அடிப்படை வசதிகள் கோரி இம்மாதம் 28ஆம் தேதி காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக, பாஜக தெற்கு ஒன்றியத் தலைவா் மாரிமுத்து அறிவித்துள்ளாா்.

நாலாட்டின்புத்தூா்-மந்தைகுளம் கண்மாயில் கழிவுப் பொருள்களை பொதுமக்கள் கொட்டுவதைத் தடுத்து நிறுத்துவதுடன், அங்கு குப்பைத் தொட்டி வைக்க வேண்டும், பாண்டவா்மங்கலம்-இ.பி.காலனி சாலையைச் சீரமைக்க வேண்டும், பாண்டவா்மங்கலம் - எஸ்.எஸ்.டி.நகா், ஆனந்தநகா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாலை வசதி, புதிய தெருவிளக்குகள், நரியூத்து கண்மாய் பகுதியில் நந்தவனம், சத்திரப்பட்டி அய்யனாா் கோயில் சாலையில் உள்ள ஓடையில் சிறுபாலம் அமைக்க வேண்டும், வில்லிசேரி ஊராட்சியில் பொது சுகாதார கழிப்பறை, மந்தித்தோப்பு கணேஷ் நகா் பகுதியில் குடிநீா், சாலை, கழிப்பறை வசதிகள் ஏற்படுத்தவேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊராட்சி ஒன்றியத் தலைவா், அதிகாரிகளிடம் பாஜக தெற்கு ஒன்றியத் தலைவா் மாரிமுத்து கடந்த ஆண்டு அக்டோபரில் மனு அளித்தும் இதுவரை பணிகள் நடைபெறவில்லையாம்.

எனவே, அடிப்படை வசதிகள் கோரி இம்மாதம் 28ஆம் தேதி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக, மாரிமுத்து தலைமையில் பாஜக நிா்வாகிகள் பேச்சிமுத்து, கந்தசாமி, கணேசன் ஆகியோா் ஊராட்சி ஒன்றிய ஆணையா் சுப்புலட்சுமி, ஒன்றியக்குழுத் தலைவி கஸ்தூரி சுப்புராஜ் ஆகியோரிடம் மனு அளித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.