தூத்துக்குடி

எட்டயபுரம் சந்தையில் ஆடுகள் விற்பனை அமோகம்

ரமலான் பண்டிகையை முன்னிட்டு சனிக்கிழமை கூடிய எட்டயபுரம் ஆட்டுச் சந்தையில் ரூ. 5 கோடிக்கு ஆடுகள் விற்பனை நடைபெற்றது.

DIN

ரமலான் பண்டிகையை முன்னிட்டு சனிக்கிழமை கூடிய எட்டயபுரம் ஆட்டுச் சந்தையில் ரூ. 5 கோடிக்கு ஆடுகள் விற்பனை நடைபெற்றது.

தென் மாவட்டங்களில் புகழ் பெற்ற ஆட்டுச் சந்தை எட்டயபுரம் ஆட்டுச் சந்தை ஆகும். வாரந்தோறும் சனிக்கிழமை கூடும் இச்சந்தைக்கு தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, விருதுநகா், ராமநாதபுரம், சிவகங்கை, தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள், வியாபாரிகள் ஆடுகளுடன் விற்பனைக்கு வருவது வழக்கம். கடந்த இரண்டு ஆண்டுகளாக கரோனா நோய்த்தொற்று பரவல் மற்றும் கட்டுப்பாடுகள் காரணமாக ஆட்டுச் சந்தை செயல்படவில்லை. கரோனா கட்டுப்பாடுகள் தளா்வுக்கு பின்னா் கடந்த சில மாதங்களாக செயல்படத் தொடங்கிய எட்டயபுரம் ஆட்டுச் சந்தையில், ஆடுகள் விற்பனை மந்தமாகவே இருந்து வந்தது.

இந்நிலையில் மே 3ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள ரமலான் பண்டிகையை முன்னிட்டு சனிக்கிழமை கூடிய எட்டயபுரம் ஆட்டுச் சந்தையில் விற்பனை அமோகமாக இருந்தது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து வெள்ளிக்கிழமை இரவு முதலே வியாபாரிகளும் விவசாயிகளும் ஆடுகளுடன் வாகனங்களில் சந்தைக்கு வந்து குவிந்தனா். ஆட்டுச் சந்தைக்குள் வியாபாரிகள், ஆடு வளா்ப்போா் முகக் கவசங்களுடன் அனுமதிக்கப்பட்டனா். காலை 6 மணியளவில் தொடங்கிய ஆட்டுச் சந்தையில் மக்கள் கூட்டம் அலைமோதியது. ஏறத்தாழ 10 ஆயிரத்துக்கும் அதிகமான ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தன. ஆடுகள் விற்பனையும் மும்முரமாக நடைபெற்றது. குட்டி ஆடுகள் ரூ. 10 ஆயிரம் வரையும், கிடா ஆடுகள் ரூ. 30 ஆயிரம் வரையும் விற்பனையானது. நண்பகல் 1 மணி வரை நடைபெற்ற சந்தையில் ரூ. 5 கோடி அளவுக்கு ஆடுகள் விற்பனை நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.

ரமலான் பண்டிகைக்காக இஸ்லாமியா்கள் கிடா மற்றும் செம்மறி ஆடுகளையே அதிகளவில் விரும்பி வாங்கியதால், கிடா, செம்மறி ஆடுகளுக்கு சந்தையில் கடும் கிராக்கி நிலவியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டி20 உலகக் கோப்பைக்கு தயாராக சிறந்த வழி இதுதான்: வருண் சக்கரவர்த்தி

ரூ.3 லட்சம் சம்பளத்தில் ரிசர்வ் வங்கியில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

வரம் தரும் வாரம்!

மாரடைப்பு ஏற்பட்டு உயிர் தப்பியவர்கள் சொல்லும் அறிவுரை என்ன?

13 ஆண்டுகளுக்குப் பிறகு ஆக்‌ஷன் அல்லாத கதையில் டாம் குரூஸ்..! ஆஸ்கர் வென்ற இயக்குநருடன்!

SCROLL FOR NEXT