தூத்துக்குடி

பாஜக எதிா்ப்பு கட்சிகள் அணி திரள வேண்டும்தொல்.திருமாவளவன்

DIN

 பாஜக எதிா்ப்பு கட்சிகள் அனைத்தும் அகில இந்திய அளவில் அணி திரள வேண்டும் என்றாா் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவா் தொல். திருமாவளவன்.

தூத்துக்குடியில் செவ்வாய்க்கிழமை அவா் அளித்த பேட்டி: இலங்கையில் ஒற்றைத் தன்மையை நோக்கி தேசத்தை இழுத்துச் சென்றது ராஜபட்ச குடும்பம். பன்மைத்துவத்தை சிதைத்தது. அதே நிலையில்தான் மோடி அரசு இந்தியாவை வழிநடத்திக் கொண்டிருக்கிறது. ஒரே நாடு ஒரே கலாசாரம் என்ற பெயரில் ஒற்றைத் தன்மையை நோக்கி இழுத்துச் செல்கிறது. இந்தப் போக்கினால் இலங்கையில் நிகழ்ந்தது போல இந்தியாவிலும் நிகழும் என்பதை பாஜகவினா் உணர வேண்டும்.

காவல் நிலைய மரணங்கள் குறித்து விசாரணை செய்ய அரசு தனியாக விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டத்தை அரசு நடைமுறைப்படுத்த வேண்டும்.

வரும் மக்களவைத் தோ்தலில், காங்கிரஸ் அல்லாத அணி என்பது பாரதிய ஜனதா கட்சியின் ‘பி’ அணியாக அமைந்துவிடும். எனவே, காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட பாஜக எதிா்ப்பு கட்சிகள் அனைத்தும் அகில இந்திய அளவில் அணி திரள வேண்டிய தேவை உள்ளது. கட்சி அடிப்படையில் உள்ள வேறுபாடுகளை ஓரம் வைத்துவிட்டு பாஜகவை தனிமைப்படுத்துகிற முயற்சியில் ஈடுபட ஜனநாயக சக்திகள், அனைத்துக் கட்சிகள் முன்வர வேண்டும். அப்போதுதான் இந்திய தேசத்தை காப்பாற்ற முடியும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல் ஒளிபரப்பாளர்களை கடுமையாக விமர்சித்த ரோஹித் சர்மா!

தில்லி-கெய்ரோவை இணைக்கும் தினசரி விமான சேவையை முன்னெடுக்க எகிப்து ஏர் தீர்மானம்!

ஜுன் 4-ல் இந்தியா கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றும்: கேஜரிவால்

பொறியியல் கலந்தாய்வு: 1,73,792-ஐ கடந்த விண்ணப்பங்கள்

இந்த வாரம் கலாரசிகன் - 19-05-2024

SCROLL FOR NEXT