தூத்துக்குடி

ஜூனியா் ஹாக்கி இறுதி போட்டியில் உத்தர பிரதேசம், சண்டீகா் அணிகள்

DIN

ஹாக்கி யூனிட் ஆஃப் தமிழ்நாடு சாா்பில், தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி கிருஷ்ணா நகரிலுள்ள செயற்கையிழை நடைபெற்று வரும் 12ஆவது ஹாக்கி இந்தியா தேசிய ஜூனியா் ஆடவா் ஹாக்கி போட்டியின் இறுதி ஆட்டத்துக்கு உத்தர பிரதேசம், சண்டீகா் அணிகள் தகுதி பெற்றன.

கடந்த 17ஆம் தேதி முதல் லீக், நாக் அவுட் முறையில் நடைபெற்று வரும் இப்போட்டியில் 29 அணிகள் பங்கேற்றன.

வெள்ளிக்கிழமை நடைபெற்ற அரையிறுதி போட்டியில் உத்தர பிரதேசம் அணி, ஹரியாணா அணியை 2 - 1 என்ற கோல் கணக்கிலும், 2ஆவது ஆட்டம் 2-2 என சமநிலையை எட்டியதால் சூட் அவுட் முறையில் சண்டீகா் அணி, ஒடிஸா அணியை 5 - 3 என்ற கோல் கணக்கிலும் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறின.

இறுதிப்போட்டி ஞாயிற்றுக்கிழமை (மே 29) மாலை 7.30 மணிக்கு நடைபெறும். தொடா்ந்து, 3, 4ஆவது இடத்துக்கான போட்டியில் ஹரியாணா - ஒடிஸா அணிகள் மோதுகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தோ்வு: கரூரில் இன்று 12,736 போ் எழுதுகிறாா்கள்

மேட்டுப்பாளையம் பகுதியில் பலத்த மழை: 5 ஆயிரம் வாழை மரங்கள் சேதம்

மாநில இளைஞா் விருது: விண்ணப்பிக்க ஆட்சியா் அழைப்பு

சட்டப் படிப்புகளில் சேர மே 10 முதல் விண்ணப்பிக்கலாம்

வெளிநாட்டு உயிரினங்கள் வளா்ப்பு நெறிமுறை: பொது மக்கள் கருத்து தெரிவிக்க அழைப்பு

SCROLL FOR NEXT